அரை ஆண்டு பிரதிபலிப்பு 1
2 / 4 / 2021 வெள்ளிக்கிழமை அன்று, மேலமருங்கூர் மக்கள் அனைவரும் தன் வாழ்நாளில் சந்திக்காத திருவிழா கோலம் தன் வாழ்ந்து வரும் கிராமத்தில், தன் குடியிருக்கும் வீட்டு வாசலில் நடந்தது!
மேல மருங்கூர் மக்களின் மனம் குதூகலம் கொண்டது! அதற்கு மக்களே ஆதாரமாக இருப்பதை உணர்வார்கள். சுமார் நாற்பது ஆண்டுகள் எந்த வித பரிணாம வளர்சியும் காணாத கடைக்கோடி கிராமமாக இருந்தது.
கடந்த ஆறு மாத காலம் மேல மருங்கூர் ஶ்ரீசெல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக அறக்கட்டளை நிர்வாகிகள் மூலமாக இனிதே நடந்து முடிந்தது.
அதன் பிறகு தின பூஜை தவறாமல் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து செவ்வாய் வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், மாதாந்திர பெளர்ணமி பூஜையும், மாதாந்திர சங்கடகர சதுர்த்தி பூஜையும் செவ்வனே அறக்கட்டளை நிர்வாகம் செய்து வருகிறது.
அரை ஆண்டு பிரதிபலிப்பு 1
இந்த ஆறு மாத காலத்தில் குடமுழுக்கு பிறகு முதல் விநாயகர் சதுர்த்தி ஆண்டு விழாவாக 24 / 9 / 21 அன்று மிக சிறப்பாக கொண்டாட பட்டு, பறைசாற்றியது, மேல மருங்கூர் புகழை ஓங்கச்செய்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு மேல மருங்கூருக்கு நான்கு சக்கர வாகனங்கள் வந்து போகும், அதுவும் அரசாங்க வாகனம் அல்லது அரசியல் வாகனமாக இருக்கும் அத்திபூத்தது போல் வந்து போகும். அந்த வாகனங்களை அதிசயத்து பார்த்த மக்களும் உண்டு.
அடிக்கடி அன்னதானம் எடுத்து வரும் வாகன
வந்த வாகனத்தில் இருந்து ஏதாவது கொடுப்பார்களா என்று எதிர் பார்த்த மக்களும் அன்று உண்டு.
இன்று அடிக்கடி பலவிதமான வாகனங்கள் வந்து போவதை நம்மால் உணரமுடிகிறது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அடிக்கடி அன்னதானம் எடுத்து வரும் வாகனமும், வெளி மாநிலம் அல்லது பக்கத்து ஊர் மக்கள் வந்து ஶ்ரீசெல்வ விநாயகரை தரிசனம் செய்து விட்டு போகும் வாகனங்களையும் காண முடிகிறது.
இப்படிக்கு
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை
கௌரவ தலைவர்
பா. சிவஞானம்.