விழாக்காலத்தில்-அரை ஆண்டு பிரதிபலிப்பு
அரை ஆண்டு பிரதிபலிப்பு 2
அது மட்டுமா விழாக்காலத்தில் மைக் செட் வாழை மர தோரண அலங்கார வாகனங்களையும் காண முடிகிறது. கோயில் பகுதியில் இருள் சூழ்ந்த நிலை மாறி எல் இ டி விளக்கு பொருத்த பட்டு, இரவு பகலாக மாற்றம் கொடுத்து மட்டும் அல்லாது கிராமத்துக்கு புதிய பொழிவு தந்துள்ளது. அது மேல மருங்கூர் ஶ்ரீசெல்வ விநாயகர் அருட்கடாட்சம் என்றே கூறலாம்
அறக்கட்டளை நிறுவனர்களுக்கு, மகா பாக்கியம்
அறக்கட்டளை நிறுவனர்களுக்கு, மகா பாக்கியம் என்று கூட சொல்லலாம். நூறாண்டு காலம் பழைமை வாய்ந்த ஶ்ரீசெல்வ விநாயகர் சக்தி, மேல மருங்கூர் கிராமத்தில் மறைக்கப்பட்டு இருந்தது , அதற்க்கு முக்கிய காரணம் சதிநாசமும், கிராமம் என்பதால் அடக்கு முறையும் அடாவடித்தனமும் என்பதை குறிப்பிட்டு சொல்லலாம்.
அத்தனை துஷ்டர்களையும் துடைத்தொழித்து புதிய பரிணாம மாற்று சிந்தனையுடன் அறக்கட்டளை நிர்வாகம் வெளிகொண்டு வந்த பெருமை அறக்கட்டளையை சாரும்.
ஆறு மாதத்தில் எத்தனை மாற்றங்கள்
இந்த முதல் கட்ட ஆறு மாதத்தில் எத்தனை மாற்றங்கள்! பூசாரிக்கு அரசாங்க மூலம் மானிய சம்பளம், ஆலயத்தின் நிலம் விநாயகர் பெயரில் பதிவு செய்தது, கோவில் அடிப்படை உரிமம் அமைய பெற்றுள்ளது. அரசாங்க இன்னும் சில முக்கிய உதவிகள் வந்து சேர்வதற்கும், செயல்படுத்தவும் சில காலம் காத்திருந்து வழங்குவார்கள் என்பது திண்ணம்.
இப்படிக்கு
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை
கௌரவ தலைவர்
பா. சிவஞானம்.