அரை ஆண்டு பிரதிபலிப்பு 3
சில ஆன்மீக சிந்தனை சுடர் இளைஞர்களும், முக்கிய கடவுள் பக்தி கொண்ட பெரிவர்களும் மற்றும் நல் உள்ளங்களும் சேர்ந்து காளையார் கோவில் ஸ்தபதி சண்முகம் அவர்களால் புதிய கம்பீர தோற்றத்துடனும் புதிய பொழிவுடனும் பழைய கோவிலை இடித்து அதே இடத்தில் ஆகம விதிப்படி கண்மாய் மேட்டில் ஶ்ரீசெல்வ விநாயகர் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் இனிதே நடந்தது.
பல ஆண்டுகளாக கேட்பார் அற்று கிடந்த ஶ்ரீசெல்வ விநாயகர் சாந்தமான வகையில் ருத்ர தாண்டவம் ஆடிவருகிறார். ஶ்ரீசெல்வ விநாயகர் மிக துல்லியமாக அருள் பாலித்தும் வருகிறார் என்பது, ஆசி பெற்ற மக்கள் சொல்லும் தகவல். நாங்கள் நற்பலன் அடைந்துள்ளோம். அந்த வார்த்தை மக்கள் மனதில் பயபக்தியோடு இருந்து வந்தவை.சில தொண்டர்கள் தொழில் நுட்ப வளர்சி மூலமாகவும், மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ விநாயகர் விளம்பரம் செய்கின்ற நோக்கம், சக்தி வாய்ந்த ஶ்ரீசெல்வ விநாயகர் என்பது குறிப்பிட தக்கது. அதனை உலக மக்களும் அறிந்து கொள்ளட்டும் என்ற நல் நோக்கத்தோடு செயல்படுத்தி வருகின்றனர்.
அந்ததொண்டர்களுக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள். 4 /10 /2021 ல் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து ஆறு மாதம் நிறைவு அடைகிறது. விடாதொரு தின பூஜைகளும் நடந்து வருகிறது அதுவே முதல் அதிசயமாக நான் கருதுகிறேன். மேல மருங்கூர் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களும் சரி, பக்கத்து ஊர்களும் சரி எத்தனை எத்தனை கோவில்கள் தான் உயிருக்கு நிகரான கடவுள் மனித ஜாதி பிரச்சினை வரட்டு கெளரவ சிக்கல் பிடிவாதம் அடாவடித்தனம் அல்லது ரவுடித்தனம் இப்படி பட்ட சில பச்சோந்திகளால் கடவுள் எனும் ஆன்மா பலகாலமாக மரணித்து வருகிறது. கடவுள் ஊரை விட்டு ஓடிவிடுகிறது.
தன் சொந்த ஊரில் தனக்கு தானே சூன்யம் வைத்தது போன்றே தோன்றுகிறது.
இப்படிக்கு
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை
கௌரவ தலைவர்
பா. சிவஞானம்.