அறக்கட்டளை நிர்வாக மாதாந்திர

அறக்கட்டளை நிர்வாக மீட்டிங் 2022

அறக்கட்டளை நிர்வாக மீட்டிங் 2022 பற்றியது ….

Facebook…Sree SelvaVinayagar Temple

அறக்கட்டளை நிர்வாக மாதாந்திர, கால் ஆண்டு அல்லது வருடாந்தர கூட்டத்தில் தீர்வு காண வேண்டிய விஷயங்கள்.

அறக்கட்டளை நிர்வாக மீட்டிங் 2022 பற்றியது …சில தலைப்புக்கள்

1) கோவிலுக்கு சம்பளம் கொடுத்து ஒரு நிர்வாகி நியமிப்பது

 

2) கோவில் அறக்கட்டளையின் குறிக்கோள் என்ன?

 

3) விலை பட்டியல் போடுவது மற்றும் அப் டேட் செய்வது.

 

4) ஸ்ரீ செல்வ விநாயகர் வெப்சைட்டில் அபிஷேக பொருட்கள் என்ன, யாக பூஜை லிஸ்ட் என்று போடுதல்.

 

5)…….

 

6)…..

 

7)…..

 

8)….

 

9)….

 

10)….

 

மேல் கண்ட 4 தலைப்புக்கள் பற்றி நான் விவாதித்துள்ளேன். இதற்க்கு மேல் தலைப்புக்கள் யார் வேண்டுமானாலும் எழுதி தந்தால் நான் பிரசுரிக்கிறேன்.

 

நிர்வாக ரீதியாக ஆராய்ந்து தீர்வு சொன்னால் வரவேற்கப்படும். தீர்வு கமிட்டீ உறுப்பினர்களுக்கு, வேளை புழுவாக இல்லாத வண்ணம் இருக்க வேண்டும்.

 

கோவில் நிர்வாகம் தாண்டி எந்த பொறுப்பும், கமிட்டீ எடுக்காது. உதாரணம், ஏதாவது, ஆடைகள் போன்ற நன்கொடை ஊர் மக்களுக்கு கொடுக்க விரும்பினால், கமிட்டீ ஆதரவு தரும். அனால் பொறுப்பு ஏற்காது.

வருஷாபிஷேக திருவிழா 2022: 24 3 2022 – 02 4 2022 பார்க்க

1) கோவிலுக்கு சம்பளம் கொடுத்து ஒரு நிர்வாகி நியமிப்பது

இதன் அவசியம் என்ன?

  • பொறுப்பான அறக்கட்டளை உறுப்பினர்கள் அவர்களின் வேலை சம்பந்த அலுவல் நிரம்பி இருப்பது, நேரம் குறைவு.
  • ரூபாய் 40000, 50000 சம்பளம் தரும் நிறுவனத்தின் வேலைகளை புறக்கணித்து விட்டு, கோவில் நிர்வாகம் செய்வது தேவையற்றது. 40, 50, 100 ஆயிரம் சம்பளம் வாங்கும் நபர்கள் 500 அல்லது 1000 போட்டு, ஒருநிர்வாகி அமைப்பது நல்ல வேலையே தக்க வைத்து நல்ல பெயர், சம்பள உயர்வு பெரும் தகுதி பெறுவதுடன் கோவில் சில்லறை வேலைகளை கோவில் நிர்வாகியிடம் கொடுத்து விடலாம்.
  • இதன் பொருள், கமிட்டீ உறுப்பினர், “மாலை வாங்கு”, “பூஜை ஏற்பாடு செய்” என்று கோவில் நிர்வாகியிடம் பொறுப்பை டெலிகேட் (பொறுப்பை ஒப்படைப்பு ) செய்யலாமே தவிர, பொறுப்பிலிருந்து தப்ப முடியாது. நிர்வாகி அழுகிய பழம், மாலை வாங்கி இருந்தால், உறுப்பினர் பொறுப்பு ஏற்று கொள்வது அவசியம்.
  • கமிட்டி உறுப்பினரின் கோவில் பொறுப்பு என்ன? கோவில் நிர்வாகியின் பொறுப்பு என்ன? இதை தெளிவு படுத்த வேண்டும்.

2) கோவில் அறக்கட்டளையின் குறிக்கோள் என்ன?

  • ஸ்ரீ செல்வ விநாயகருக்கு சேவை செய்ய வழிநடத்துவது
  • பக்தர்களின் எண்ணிக்கையை வருடா வருடம் உயர்த்துவது.
  • ஜாதி, மதம், தொழில், பண வசதி, அந்தஸ்து, பதவி வேற்றுமையின்றி , பக்தர்கள் சரி சமமாக வழி நடத்துவது, சம உரிமை கொடுப்பது.
  • பூஜாரி, மற்ற வேளை செய்பவர்கள், பக்தர்கள் யாரும் மன வருத்தம் வராமல் பார்த்துக்கொள்ளுதல்.

உதாரணம்:

  • சாப்பாடு செய்தவர், பூஜாரி, மற்ற சேவை செய்தவர்கள், நல்ல பலன் பெற வேண்டும் ஆனால், அதிக செலவாகிறது என்று பக்தர்கள் வராமல் போய் விடாமல் பார்த்துக்கொள்ளுதல்.
  • பக்தர்களிடம் கறந்து கோவிலுக்கோ, பூஜாரி வயித்தை அடித்து, பக்தர்களுக்கோ பலன் போய் விடாமல் இருக்க, விலை நிர்ணயம் செய்வது அவசியம்.

3) விலை பட்டியல் போடுவது மற்றும் அப் டேட் செய்வது.

உதாரணம்:

  • வாழை மரம் எவ்வளவு?
  • அதை கோவில் கொண்டு வர வாடகை எவ்வளவு?
  • பூஜாரி பீஸ் என்ன?
  • பூஜாரிக்கு தட்டில் எவ்வளவு போடா வேண்டும்?
  • என் தம்பி செய்த பூஜையில் ரோஜா மாலை 100 ரூபாய். ஆனால் எனக்கு அதே அளவில் ரோஜா மாலை, ரூபாய் என் அந்த வித்தியாசம்? இது போன்ற மன வருத்தத்தை தவிர்க்க ரோஜா போன்ற அணைத்து பொருட்களும் விலை மாற்றத்தை அப்டேட் செய்வது முக்கியம்.

4) ஸ்ரீ செல்வ விநாயகர் வெப்சைட்டில் அபிஷேக பொருட்கள் என்ன, யாக பூஜை லிஸ்ட் என்று போடுதல்.

  • வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர், நேரம் செலவு செய்யாமல், சற்று விலை கூட இருந்தாலும் பரவாயில்லை என்று யாரிடமாவது பொறுப்பை கொடுத்து விடலாம்.
  • சிவகங்கை, கீறுகுடி, வலனையிலிருந்து வருபவர்கள், பொருட்களை அவர்களே வாங்கி வருவதால், பணம் சற்று சேமிக்கலாம்.
  • நோக்கம், சர்வ சுதந்திரம் பக்தர்களுக்கு தேவை.

******************************************************************************************************************************

கோவில் ஸ்தாபகர், 1986ல் சுய காரியங்களில் வெற்றி பெற்றதால், செல்வ விநாயகரிடம் கொடுத்த வாக்குப்படி கோவில் கட்டினார். அதே கடவுள் ஊரை விட்டு ஒதுங்கி போனவனை, இழுத்து மறு  கும்பாபிஷேகம் செய்ய வைத்தது.

 

மேற் சொன்ன இருவரும் செல்வ விநாயகரால் பலன் அடைந்தவர்கள்.

 

இனி செல்வ விநாயகரிடம் பலன் பெரும் பக்தர்கள் எண்ணிக்கை கூடும். அந்த எண்ணிக்கையை நிர்வகித்து, புது புது பக்தர்கள் ஒற்றுமையாக வழிபட செய்வது கமிட்டியின் கடமை.

 

மிக முக்கியமான பகுதி, அல்லது பலன் வழிபாட்டுக்கு  பின், பக்தர்கள் முதல், தெய்வ தொண்டு செய்தவர்கள், பிரசாதம் சாப்பிட்டவர்கள் வரை பொசிட்டிவ் எனர்ஜி இருந்தால்தான், அனைவருக்கும் பலன்.

 

இந்த பொசிட்டிவ் வைப்ரஷன் உருவாக்க, இயங்க தேவையான நடவடிக்கைகள் செய்வது கமிட்டீயின் கடமை.

 

நினைவு இருக்கட்டும்:

 

36 வருடம் முன்  கும்பாபிஷேகம் செய்து வைத்த ஐயர் கோபித்து கொண்டதாக வரலாறு.

 

கோவில் பிரசித்தியுடன் இயங்க

1) பக்தர்கள்

2) பூஜாரி, கமிட்டீ போன்ற சேவகர்கள் அல்லது தொண்டர்கள்

3) விக்ரகம் உள்ள கோவில்

 

பக்தர்கள் இல்லை என்றால் கோவில் தேவை இல்லை. வேண்டுதல் நிறைவேறியதால், ஸ்தாபகர் போன்ற பக்தர்கள்,  மற்றவர்களையும் பலன் பெற கோவில் கட்டினார்.

கோவில் 36 வருடம் இயங்காமல் செயல்படாமல், போனது போல  போய் விட கூடாது என்றால், வேதங்கள், மந்திரங்கள் தெரிந்த பூஜாரிகள் அல்லது ஐயர்கல் தேவை.

இந்த 1 1/2 ஆண்டில், எத்தனை யாகங்கள், பூஜைகள், அன்னதானங்கள்? 36 ஆண்டில் இது போன்று செயல் பட விடாமல் போனது, பலவித உருப்படாத கொள்கைகளும், கோட்பாடுகளும் என்பது தெரிந்ததே.

ஆக ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது. எதையும் ஒதுக்க முடையாதது. ஒருங்கிணைக்க தேவையான, நிவர்த்தி உருவாக்க வேண்டியது, கமிட்டீயின் கடமை.

நிவர்த்தி உருவாக, அடிக்கடி கூட்டம் போட்டு, சிறு சிறு மனக்கசப்பை, நிவர்த்தி செய்ய வலி தேடுவது, கமிட்டீ கடமை.

உதாரணம், ரோஜா மாலை எனக்கு விலை அதிகம் என்று பின் குறையாக நான் நினைப்பதை தவிர்க்க, முன் கூட்டியே, வெப்சைட்டில், விலை பட்டியல் இருந்தால், நான் வெறும் அருகம் புல் மாலை போட்டு, எனது வேண்டுதலை முடித்துக்கொள்வேன்.

கீதையில், எனக்கு இலை (துளசி), பால், பழம் பக்தியுடன், ஆழ்ந்த அன்புடன் கொடுத்தால் நான் ஏற்றுக்கொள்வேன் என்று பகவானால் சொல்லப்படுகிறது. யார் அதிக விலையில் ரோஜா மாலை வாங்கி போடுகிறார்களா அவர்களுக்கே பலன் தருவேன் என்று சொல்ல வில்லை.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *