உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே

உழைக்கும் கைகளே

உருவாக்கும் கைகளே

உலகை புது முறையில்

உண்டாக்கும் கைகளே

செல்வ விநாயகர் கோவில் வருகிற 2.4.2021 அன்று மிகசிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது-கலப்பணியில் பெயர், புகழ், கேவலம் ஒரு தேங்காய் மூடி, மரியாதை தலைப்பை போன்று எதுவும் எதிர் பார்க்காமல் உழைக்கும் கரங்கள்.

செல்வ விநாயகர் கோவில் வருகிற 2.4.2021 அன்று மிகசிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது-கலப்பணியில் பெயர், புகழ், கேவலம் ஒரு தேங்காய் மூடி, மரியாதை தலைப்பை போன்று எதுவும் எதிர் பார்க்காமல் உழைக்கும் கரங்கள்.

அவர்களுக்காக சமர்ப்பித்த பாடல்.

 

Parthiban
Nivash

உழைக்கும் கைகளே

உருவாக்கும் கைகளே

உலகை புது முறையில்

உண்டாக்கும் கைகளே

 

உழைக்கும் கைகளே

உருவாக்கும் கைகளே

உலகை புது முறையில்

உண்டாக்கும் கைகளேஏ

உண்டாக்கும் கைகளே

 

ஆற்று நீரை தேக்கி வைத்து

அணைகள் கட்டும் கைகளே

ஆண்கள் பெண்கள் மானம் காக்க

ஆடை தந்த கைகளே

சேற்றில் ஓடி நாற்று நட்டு

களை எடுக்கும் கைகளே

செக்க வானம் போல என்றும்

சிவந்து நிற்கும் கைகள்

எங்கள் கைகளே

 

உழைக்கும் கைகளே

உருவாக்கும் கைகளே

உலகை புது முறையில்

உண்டாக்கும் கைகளேஏ

உண்டாக்கும் கைகளே

பலன் மிகுந்த எந்திரங்கள்

படைத்தது விட்ட கைகளே

பாதை போட்டு உலகை ஒன்றாய்

இணைத்து வைத்த கைகளே

பாரில் உள்ள பெருமை யாவும்

படைத்ததெங்கள் கைகளே

பச்சை ரத்தம் வேர்வையாக

படிந்து நிற்கும் கைகள்

எங்கள் கைகளே

 

உழைக்கும் கைகளே

உருவாக்கும் கைகளே

உலகை புது முறையில்

உண்டாக்கும் கைகளேஏ

உண்டாக்கும் கைகளே

 

உலகம் எங்கும் தொழில் வளர்க்கும்

மக்கள் ஒன்றாய் கூடுவோம்

ஒன்று எங்கள் ஜாதி என்று

ஓங்கி நின்று பாடுவோம்

சமயம் வந்தால் கருவி ஏந்தி

போர் முனைக்கு ஓடுவோம்

தர்ம நீதி மக்கள் ஆட்சி

வாழ்கவென்றே ஆடுவோம்

நாம் வாழ்கவென்றே ஆடுவோம்

 

JayaPrakash

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *