என் பெயர் பார்த்திபன் 2
என் பெயர் பார்த்திபன் நான் மேலமருங்கூர் கிராமத்தில் பிறந்தவர் .
என் கிராமத்தை சுற்றிலும் நிறைய கிராமங்கள் உள்ளன.நிறைய கோவில்களும் உள்ளன . வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகையான சூழலில் கோவில்களை கட்டி முன்னோர்கள் வழிபாடு செய்ய வாய்ப்பு உண்டு பண்ணி விட்டு மறைந்து விட்டார்கள்.
அந்த வகையில் எங்கள் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலும் அப்படித்தான் இருந்தது MKபாலுச்சாமி அய்யா அவர்கள் கிராமத்திற்கு அருமையான அழகான ஒரு அற்புதமான செல்வ விநாயகர் ஆலயத்தை முப்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்து கொடுத்து உள்ளார்கள் .
ஆனால் அதன் பின்னர் எத்தனை முறை பூஜை மற்றும் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விழாக்கள் கொண்டாடியதாக எனக்கு முப்பத்து ஏழு வயது ஆகிறது .
என் பெயர் பார்த்திபன் 2
கோவில் கட்டிய ஆண்டு (1985) பாலுச்சாமி செட்டியார்) அதன் பின்னர் பாலுச்சாமி செட்டியார் செல்லம்மாள் இவர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் எதார்த்த நிகழ்வாக யாரும் அழைக்காமல் இறைவன் அருளோடு மருங்கூர் கிராமத்திற்கு வந்து ஆண்டு 2019,
கிட்டத்தட்ட முப்பது ஆறு ஆண்டுகள் கிராமத்தில் உள்ள மக்களிடையே நீ பெரியவனா நான் பெரியவனா மற்றும் எனக்கு மாலை மற்றும் பரிவட்டம் முதல் மரியாதை ஆதிக்க நிலை மற்றும் செயல் படுத்தும் நபர் மீது நம்பிக்கை இல்லாமை சாப்பிட வழி இல்லை என்றாலும் வரட்டு கௌரவத்தை மனதில் சுமந்து கொண்டு வாழ்க்கை பயணம் ஓடியது

செட்டியார் அய்யா அவர்கள் கிராமத்திற்கு கட்டிக் கொடுத்த கோவிலும் நாய் எலி பூச்சிகள் புடை சூழ்ந்து கொண்டது மேலே ஆலமரம் மற்றும் புற்கள் முளைத்து சுவர்கள் உடைந்த நிலையில் காணப்பட்டது.
இதை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்த நல்ல மனிதர்கள் மனமும் உடைந்து காணப்பட்டது.
அடுத்த பதிவில் 2019 தெய்வ திரு பாலுச்சாமி செட்டியார் செல்லம்மாள் இவர்களின் மகன்கள் உயர் திரு பாண்டுரங்கன் அய்யா அவர்கள் மற்றும் உயர் திரு சிவஞானம் அய்யா அவர்கள் மற்றும்
அவரது மகள்கள் வருகைக்கு பின் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி எழுதுகிறேன் . இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க வாழ்க வளமுடன்?????
My name is Parthiban 2-என் பெயர் பார்த்திபன் 2
My name is Parthiban and I was born in Melamarungur village.
So, there are a lot of villages around my village. There are also a lot of temples. The temples were built in different contexts at different times and the ancestors had the opportunity to worship and disappear.
In the same way, the Selva Ganesha temple in our village was like that.
But I am thirty-seven years old and how many times after that the pooja and the villagers all celebrated the festivals together.
My name is Parthiban 2
Year of construction of the temple (1985) Baluchamy Chettiar)
After that Baluchami Chettiar Sellammal came to Marungur village with the grace of the Lord without inviting anyone to their sons and daughters as a real event in 2019,
almost thirty-six years ago And the journey of life ran with the dry dignity in mind even though there was no way to eat without faith in the person who acted
The temple that Chettiar Ayya had built for their village was surrounded by dog and rat infestations
And the walls were broken with trees and grass sprouting above.
The minds of the good men who thought this should be fixed were also found to be broken.
In the next post I will write about the changes that took place after the arrival of 2019
Deva Thiru Baluchamy Chettiar Sellammal His sons High Mr. Bandurangan Ayya as well as High Mr. Sivagnanam Ayya and his daughters. Pleasure surrounds everyone with life and prosperity?????