சங்காபிஷேகம் ஆலயத்தில் (108)செய்து தரப்படும், அதுவும் கமிட்டீயின் அறிய முயற்சியில், சாதாரண மக்களும் சங்காபிஷேகம் செய்து ஸ்ரீ செல்வ விநாயகரின் ஆசியை பெரும் வண்ணத்தில் மிக சிக்கனமான கட்டணத்தில் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும் – மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் செய்து தரப்படும்.
இந்த அறிய வாய்ப்பை, பயன் படுத்திக்கொள்ள, பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள். எளியோருக்கு, இது போன்ற சங்காபிஷேகம் செய்து, குடும்ப சுபிட்சம் பெற வரவேற்கப்படுகிறது.
வருடம் ஒரு முறையாவது அவர் அவர் குடும்பத்தில் செய்வது காலச்சிறந்தது. சிலர் அவர் அவர் வாழ்வில் ஏற்படும் வேண்டுதல் நிறைவேறுவதை வைத்து, வருடம் பல சங்காபிஷேகம் செய்யும் பக்தர்களும் உண்டு.
குறைந்த பட்சம் 2022ல், இந்த கட்டணம் நிலைக்கும். இந்த ஆண்டில் மட்டும், சங்குகள், சிறிய குடங்கள், வாடகை தள்ளுபடி செய்யப்படுகிறது.
பக்தர்கள், சங்காபிஷேகம் தங்கள் குடும்பம் சார்பாக, செய்ய நினைப்பவர்கள், கீழ் கண்ட கமிட்டீ உறுப்பினரை அல்லது பூஜாரியை தொடர்பு கொள்ளவும்.
மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் (108) சங்காபிஷேகம் ஆலயத்தில்செய்து தரப்படும்
சங்காபிஷேகம் மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் செய்து தரப்படும்
உங்கள் குடும்பம், தொழில், ஆரோக்கியம், செல்வ வளம் முன்னேற்றம் காண, குறைந்தது வருடம் ஒரு முறையாவது, மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம் செய்ய பக்தர்களுக்கு அழைப்பு விடுகிறது அறக்கட்டளை.
சங்காபிஷேகம் செய்வதால் என்ன பலன்?
ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ. அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையில் தான் திருக்கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது
வாழை இலை 1அடுக்கு. பச்சரிசி 1கிலோ தேங்காய் பழங்கள் பூக்கள் மாலை அருகம்புல் யாகசாமான்கள் மஞ்சள் தூள் நெய் எண்ணெய் இவை அனைத்தும் தாங்கள் வசதி மற்றும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப வாங்கி கொள்ளலாம்.
அத்தியாவசியமாக இரண்டு அய்யருக்கு 1500+1500=3000 பிரசாதம் 500 கோவில் வளர்ச்சி கட்டணம் 501 கண்டிப்பாக கொடுக்கவேண்டும்
இரண்டு அய்யருக்கு
3001/=
பிரசாதம்
501/=
கோவில் வளர்ச்சி கட்டணம்
501/=
Total
4003/=
கோவில் கமிட்டி சார்பில் கலசங்கள் (108) சங்குகள் நூல்கண்டு மாவிலைகள் ஏற்பாடு செய்து தரப்படும்.
மற்ற உடல் உழைப்பு சார்ந்த உதவிகள் அனைத்தும் மனநிறைவு தரும் வகையில் கமிட்டி சார்பில் செய்து தரப்படும்.
ஆகவே மேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்தில் சங்காபிஷேகம் செய்து தங்கள் தொழில் வளம் கல்வி வளம் உடல் நலம் சிறந்து மேலும் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி பெற பங்கு பெறும் படி அன்புடன் அழைக்கிறோம்.
இவண். கௌரவ தலைவர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் மேலமருங்கூர்.
விநாயகருக்கு விஷேச பூஜை செய்ய விரும்பினால்…
மேலும் அன்றைய தினம் விநாயகருக்கு விஷேச பூஜை செய்ய விரும்பினால் அபிஷேகம் பொருட்கள் மற்றும் வெற்றிலை பாக்கு சூடம் சாம்பிராணி அவர் அவர் வசதிக்கேற்ப தாங்களாகவோ அல்லது கமிட்டி மூலமாகவோ வாங்கி கொள்ளலாம்.
வாங்கிய பொருட்கள் அனைத்திற்கும் பில்லுடன் சமர்ப்பிக்கப்படும். வாழ்க வளமுடன் எல்லா செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை கமிட்டி சார்பில் வேண்டுகிறோம் ??????????
சங்காபிஷேகம் செய்வதால் என்ன பலன்? …சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும்
ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ. அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையில் தான் திருக்கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது
சங்காபிஷேகம் அதன் பிரதிபலிப்பும் 1..சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும்
சங்கு ஆன்மீக சடங்குகள் செய்வதற்க்கு மிக புனிதமான ஒன்று.
சங்கு அனைத்து தெய்வங்களுக்கும், அபிஷேக ஆராதனை செய் முறைக்கும் அதித சக்தி மிக்கது.
எந்த தெய்வமாக இருந்தாலும் சங்கால் அபிஷேகம் செய்வது, அந்த தெய்வ பலத்தை வலுவடைய செய்யும். சுருங்க சொன்னால் வஷ்யம் அடையும்.
தெய்வ பூஜைகள் செய்வதர்க்கு கலசத்திற்க்கும், அடுத்து பயன் பாட்டுக்கும், வலம்பூரி சங்கும், பால் சங்கும் நம் இந்து கடவுளுக்கு மிக அதிக சக்தி வாய்ந்தது.
அதிக உயிரோட்டம் கொண்ட அல்லது சக்தி மிக்க விநாயகர்,சிவன், பெருமாள் போன்ற இரைவனுக்கு வருடா வருடம் மிக முக்கிய விழா காலங்களில் சங்காபிஷேகம் நடைபெற்று வருகிறது.
மலேசியா நாட்டில், தலை நகர் கோலாலூம்பூரில், பழைமை வாய்ந்த கோட் மலை விநாயகர் ஆலயத்தில், தினமும் காலையும் மாலையும் இடை விடாது 1008 சங்காபிஷேகம் நடந்து வருவது குறிப்பிடதக்கது.உலக புகழ் பெற்ற திரு தலமாக வலம் வருகிறது.
யாகம் வளர்த்து கலசங்கள் வைத்து சில முக்கிய மருந்து வகை சேர்த்து, வேத பாராயணம் ஓதி , மூலவருக்கு! கலசத்தை கொண்டு செல்லும் பாக்கியம் அந்த ஓதுவார்கள் மட்டும் உண்டு.கலசத்தை எடுத்துச் செல்லும் அதிகாரம் அல்லது ஐதீகம் முறை படி வரையறை கட்டுபாடுகள் வகுக்கப்பட்டுள்ளது. அங்கு பொது மக்கள் கலசத்தை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
சங்காபிஷேகம் அதன் பிரதிபலிப்பும் 2…சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும்
கலசம் வைத்து ஆராதனை செய்வது அது முழுமை பெற்ற வழிபாடு.
ஆன்மீக முறையில் சொன்னால் அதற்கு உண்டான கலச ஏற்பாடுகள் மிக மிக கடினமான உழைப்பும், கட்டுபாடும் ஒத்துழைப்பும் அளப்பறியது.
ஆனால் . சங்காபிஷேகம் ஒவ்வொரு தாம்பாள தட்டுகளிலும், இருபது முப்பது என்று அரிசி போட்டு அதன் மேல் வரிசை படுத்தி அடுக்கப்பட்டிருக்கும். சங்கில் மருந்து கலந்த அபிஷேக நீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டு இருக்கும் .
ஓதூவார்கள் வேதங்கள் பாராயணம் செய்து முடித்த பிறகு,
மூலவர் அருட்கடாட்சம் கிட்டட்டும் என்ற அடிப்படையில் ஆளுக்கு ஒரு சங்கு நிரைப்பிய தட்டு மக்கள் கையில் கொடுத்து, ஆலயத்தை பிரகாரம் சுற்றி வந்து, மூலவரிடம் காத்திருக்கும் குருக்களிடம் கொடுக்க வாய்ப்பாக அமைத்து கொடுக்கின்றனர்.
அதனை மகா பாக்கியமாக எண்ணுகின்றனர் மக்கள். காரணம் கடவுளுக்கும் பக்தர்களுக்கும் தொடர்பு ஊடகம் இந்த சங்கிற்க்கு உண்டு. நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்த வகையில் பார்க்கும் பொருளும் புனிதமானதாக இருப்பதையும் உறுதி செய்துள்ளனர்.
சங்காபிஷேகம் அதன் பிரதிபலிப்பு 3…சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும்
பார்ப்பதில் புனிதத்தை வைத்த நம் முன்னோர்கள், மக்களுக்கு கடவுளிடம் இருந்து கிடைக்கும் மிகப் பெரிய பலனே, பதினாறு வகை செல்வங்களும் பெற்று பெரும் வாழ்வு வாழ வழிகள் தான்.
பால் குடம் எடுப்பது, மாலை செலுத்துவது, அபிஷேகம்ஆராதனை செய்வது , பொங்கல் வைப்பது, அர்ச்சனை செய்வது,இது போன்ற வேண்டுதல் ஒரு தனி நபர் பக்தியை குறியிட்டு காட்டுகிறது.
ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரது வேண்டுதல் நிறைவேற,குடும்பம் செழித்து வளர,வம்சாவளிகள் விருத்தி அடைய நாம் பெரிய பூஜை என்று எடுத்து செய்வது மகா பாக்கியம், மிக பெரிய புண்ணியம்.
தன் குடும்பம் செழித்தோங்க ,நல்ல தெய்வ பலன் அடைய வேண்டு மானால், சங்காபிஷேகம் எடுத்துச் செய்வது சாலச் சிறந்தது.
அடிக்கடி சங்காபிஷேகம் செய்வதால், தெய்வ பலமும்,செய்த பலனும், இறைவனுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு பாலம் என்றும் நிலைத்து செயல் படும் என்பதில் எந்த ஐய்யப்பாடும் கிடையாது.
சங்காபிஷேகம் அதன் பிரதிபலிப்பு 4…சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும்
கீர்த்தி சிறியது என்றாலும் மூர்த்தி பெரியது, என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் மேல மருங்கூர் ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயம்.
கோவில் சிறியது என்றாலும் மூலக் கடவுள் ஸ்ரீசெல்வ விநாயகர் சக்தி மிக்க விநாயகர், என்பதனை நான் சொல்லி மேலமருங்கூர் மக்களுக்கும்,மருங்கூர் மக்கள் உற்றார் உறவினர்களுக்கும், பக்கத்து கிராம மக்களுக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
நூறாண்டுகள் கடந்த பழமை வாய்ந்த ஸ்ரீசெல்வ விநாயகர் , வேண்டிய வரத்தை அள்ளி தந்துள்ளார் . அதற்கான ஆதாரம் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டு ஆண்டுக்கிடையில் பலன் அடைந்தவர்கள் பலர் உண்டு .
யாம் அடைந்த பல பலன்கள் வெளி மாநிலம்,வெளி நாட்டு மக்களும் அடைய வேண்டும், என்ற எண்ணத்தில் நான் அறிந்த கருத்துக்களை பதிவு செய்துள்ளேன்.
இன்றைய இளையோர்கள் பல வேலை நிமித்தம் நேரம் பற்றாதது இப்படி காரணம் பல இருந்தாலும், சில பொறுப்புக்களை சமாளிக்க அல்லது கவனம் செலுத்துவது அவசியம். நம் வீட்டில் குழந்தைகளையும், முதியவர்களையும் நமது கடமைக்கு இடையில் எப்படி சமாளிக்கிறோமோ, அதனை போன்றுதான் நம் முன்னோர்களால் கட்டி காத்து வந்த கிராமத்து பூர்விக கோவிலும் கடமையுடன் கட்டி காக்க வேண்டும்.
சங்காபிஷேகம் அதன் பிரதிபலிப்பு 5….சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும்
எந்த பக்கத்து கிராமத்துக்கும் கிடைக்க பெறாத அரிய பொக்கிஷம், மேலமருங்கூர் கிராமத்துக்கு கிடைக்க பெற்றுள்ளது.அந்த பொக்கிசம் எனும் செல்வ விநாகர் மேலமருங்கூர் கிராம மக்களுக்கு பெருமை மட்டும் அல்ல, சரியான உபசரனை செய்வதிலும் பெருமை மிக்கவர்கள்.
பெருமையோடு நின்றுவிடாமல், விநாயகரின் சக்தியை அதிகரிக்க அருட்கடாசம் மென்மேலும் பெருக , தின பூஜை,ஆண்டு பூஜை,பெளர்ணமி பூஜை, சங்கடகர சதுர்த்தி இவை அனைத்தும் மக்கள் நலம் பெற செய்து வருகிறோம்.
அருளாசி வழங்க வினாயகர் தன் சக்தியை வலுப்படுத்த, தன்பலத்தை தக்க வைத்துக்கொள்ள, தன் அழகு தோற்றம் மென்மேலும் மெருகு பெற, மக்கள் மனதை தன் வசப்படுத்த,சாத்வீகம் அடைய,மக்களுக்கு பதினாறு செல்வங்களை வாரி வழங்க காத்திருக்கும் விநாயகனுக்கு, நாம் செய்ய வேண்டிய கடமை, வாரம் ஒரு முறையாவது சங்காபிஷேகம் செய்வது.
குக் கிராமத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீசெல்வ விநாயகர் அருளை பெற்ற மகராச மக்களுக்கு தெரியும் விநாயகரின் மகிமை. கும்பாபிஷேகம் முடிந்த பதினாரு மாதங்களில் எத்தனை,எத்தனை யாக பூஜையும்,கலச பூஜையும் நடந்தேறியது ! மேல மருங்கூர் மக்கள் இன்ப வெள்ளத்தில் மிதந்தனர்.
சங்காபிஷேகம் அதன் பிரதிபலிப்பு 6…சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும்
யானை முகனை, மூஷிகவாகனனை, ஐங்கரனை,விக்ன விநாயகனை, ஸ்ரீ கணேசனை,ஸ்ரீ செல்வ விநாயனை கடைக்கோடி குக் கிராமத்தில் நூறாண்டுகளுக்கு மேல் அருள் பாலித்து வரும் மேல மருங்கூரை திசை பார்த்து வணங்கி வழி படுகிறேன்.
கலச பூஜை பெரிய பொருட் செலவும்,மக்களுக்கு சுமை இல்லாத பொருட் செலவும் ,நினைவில் கொண்டு நூற்றி எட்டு (108 )சங்காபிஷேகம் செய்து கொடுத்து, மக்கள் மனதில் முதல் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடைமுறை படுத்துவது.
எளிமையான வழி குக் கிராமத்துக்கு மிக சாத்திய மாக இருக்கும் என்று கமிட்டி.
எண்ணுகிறது. இதனை நடை முறை படுத்த கமிட்டி உறுப்பினர்கள் மிகவும் முயன்று வருகிறார்கள். உள் மாநிலம் , வெளி மாநிலம், அயல் நாடு மற்றும் சுற்றி உள்ள கிராம மக்களின் ஆதரவை ஒத்துழைப்பையும் மிகவும் எதிர் பார்கிறோம்.
நடுத்தர குடும்பத்தினரும்,எழை குடும்பம் கூட்டு முயற்சியிலும் சங்காபிஷேகம் செய்வதர்க்கு ஏதுவாக இருக்கும் என கமிட்டி கருதுகிறது.அதற்க்கு மேல் 1008,10008 சங்காபிஷேகம் செய்ய விரும்புவோர், மேல மருங்கூர் ஸ்ரீசெல்வ விநாயகர் கமிட்டி உறுப்பினர்களை தொடர்பு கொள்ளும் படி அன்புடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்.