சங்காபிஷேகம் மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் செய்து தரப்படும்

சங்காபிஷேகம்  SSVஆலயத்தில் செய்து தரப்படும்

சங்காபிஷேகம் மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் SSVஆலயத்தில் செய்து தரப்படும்

உங்கள் குடும்பம், தொழில், ஆரோக்கியம், செல்வ வளம் முன்னேற்றம் காண, குறைந்தது வருடம் ஒரு முறையாவது, மேல மருங்கூர் ஸ்ரீ செல்வா விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம் செய்ய பக்தர்களுக்கு அழைப்பு விடுகிறது அறக்கட்டளை.

 

சங்காபிஷேகம் செய்வதால் என்ன பலன்?

ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ. அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையில் தான் திருக்கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது

தொடர்புக்கு கமிட்டீ: 96004 60828/97515 04073

இளம்வழுதி பூசாரி: 9443465582

 

Source: https://makkalosai.com.my

சங்காபிஷேகம் தரிசிப்பதால் என்ன நன்மை

சங்கு நந்தி: கன்னியாகுமரி அருகிலுள்ள சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தாணு (சிவன்), மால் (பெருமாள்), அயன் (பிரம்மா) ஆகிய மும்மூர்த்திகளும் இணைந்த மும்மூர்த்திகளை தரிசிக்கலாம். இக்கோயிலில் உள்ள நந்தி கடலில் கிடைத்த சங்குகளைக் கொண்டு செய்யப்பட்டதாகும். அமைப்பிலும் பெரிதாக இருப்பதால் இதற்கு ‘மாகாளை என்று பெயருண்டு.

திருப்பாவையில் சங்கு: பழம்பெரும் கோயில்களில் காலை வேளையில் சங்கு ஒலிக்கும் வழக்கம் இருந்துள்ளது. சங்கு ஒலிக்கும் இடத்திற்கு தேவர்கள் வருவதாக ஐதீகம். திருப்பாவையில் ஆண்டாள் காலையில் விடிந்து விட்டது, சங்கும் ஒலித்து விட்டது, இன்னும் எழுந்திருக்கவில்லையா தோழியே! என்று கேட்கிறாள். புள்ளும் சிலம்பினகாள் எனத்துவங்கும் பாடலில், ‘வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? என்று பாடுகிறாள். இதிலிருந்து அக்காலத்தில் அதிகாலையில் கோயில்களில் சங்கொலி கேட்டு, எழும் பழக்கம் இருந்துள்ளதை அறியலாம். ‘கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோதிருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோமருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கேஎன்று மற்றொரு பாடலில் ஆண்டாள் சொல்கிறாள். ‘ஆழி என்றால் பாற்கடல். கடலில் பிறந்ததால் ‘ஆழி வெண் சங்கு எனக் குறிப்பிடுகிறாள்.

சங்காபிஷேகத்தின் பலன்: சங்கபிஷேகத்தால் சகோதர ஒற்றுமையும் வளரும். சங்கு செல்வத்தின் அம்சம் என்பதால், செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வர். இதைத் தரிசிப்பவர்களுக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். வீடுகளில் நுழைவு வாயில் தரையில் சங்கு பதிக்கும் வழக்கம் இருக்கிறது. சில வீடுகளின் வாசல் முன்பும் சங்கைக் கட்டுவதுண்டு. இதனால் திருஷ்டி தோஷம் நீங்கி செல்வம் விருத்தியாகும்.

சங்காபிஷேகம் காண்போம் செல்வச்செழிப்பு அடைவோம்!