1/1/2023 சங்காபிஷேக பூஜை மிக சிறப்புடன் முடிந்தது என்பதுடன், மீண்டும் மீண்டும் மக்கள் முன் வந்து அவர் அவர் குடும்பத்து சார்பாக, செய்ய வேண்டும் என்பதுதான் கமிட்டியின் எதிர்பார்ப்பு.
பொதுவாக ஒரு குடும்பம் சார்பாக குறைந்தபட்சம் வருடம் ஒன்று அல்லது இரண்டு சங்காபிஷேகம் செய்ய பெரியவர்கள் சொல்வார்கள்.
முழு செலவுகள் ஏற்க முடியாத குடும்பங்கள், பல குடும்பங்கள் இணைந்து செய்து கொள்ளலாம்.
அல்லது, பொது சங்காபிஷேகம் வரும் சமயத்தில், ஒரு சிறு தொகை கட்டி, பங்கேற்கலாம்.
பெரிய செலவு செய்தும் சங்காபிஷேகம் செய்யலாம். சிறு தொகை கட்டியும் செய்யலாம்.
எப்படி செய்யப்போகிறீர்கள் என்பது முக்கியம் இல்லை.
சங்காபிஷேகம் செய்வது முக்கியம்.
ஒவ்வொரு வருடமும் உங்கள் குடும்பம் முன்னேற்ற படிகளில் உயர்வது முக்கியம்.
ஒரு 5 வருடம் தொடர்ந்து, உங்களின் வேண்டுதலை அரி செல்வா விநாயகர் கோவிலில் வைத்து, உங்களின் முன்னேற்றத்தை கூர்ந்து கவனித்து பாருங்கள்.
கும்பாபிஷேகம் முடிந்து பலர் நல்ல பலன் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமத்தில் நிறைய பேர்களுக்கு பலன்கள் அடைந்தவர்கள் யார் என்பது தெரிகிறது.
பலன் அடைந்தவர்கள், கிடைத்த பலனை பகிரங்கமாக சொல்வதற்கு அஞ்சுகின்றனர்.
கண்த்ரிஷ்டி பட்டுவிடும் என்று அஞ்சுகின்றனர்.
1 1 2023ல், நடந்த சங்காபிஷேகத்தில், ஒரு சிறு தொகை கொடுத்து கலந்து கொண்டார் ஒருவர் .
அதன் பலனா என்று தெரியவில்லை. மறுநாள், இவர் நிரந்தரமான வேலைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு நல்ல தொகை, வருமானமாக கிடைத்தது.
அவர் நன்றியை செலுத்துவதற்காக, சில கோவில் செய்ய வேண்டிய சிறிய செலவுகளை, இவர் ஏற்றுக்கொண்டார்.
மற்ற சிலர், குழந்தை பாக்கியம், உத்தியோக உயர்வு, திருமண வரன் அமைதல் போன்ற நன்மைகள் அடைந்தவர்கள் பலர் உண்டு.