சங்காபிஷேகம் 10/2/2023 மிகசிறப்பாக நடந்துமுடிந்தது…
சங்காபிஷேக விழா 10, பிப்ரவரி 2023ல் மிக சிறப்பாக நடந்து முடிந்தது
சங்காபிஷேகம் நன்றாக நடத்தி கொடுத்த பூஜாரி இளம்வழுதி & அவரின் குழுவுக்கும், மற்றும் கோவில் கமிட்டீக்குத்தான் அத்தனை பெருமையும் சேரும்.
மலேஷியா நாட்டில் இருந்து பணம் அனுப்பி விடலாம். பணம் அதி முக்கியம்தான்.
ஆனால், எந்த பிரதி பலனும் பார்க்காமல் உழைக்கும் கமிட்டீ உறுப்பினர்களின் உதவி இல்லாமல் அந்த பணத்துக்கும் பலன் இல்லைதான்.
முழுமையாக சங்காபிஷேகத்தில் கலந்து சென்ற
அத்தனை கமிட்டி உறுப்பினர், கிராமத்து மக்கள், மற்றும் சிறப்பு வருகை தந்து, மிக பொறுமையாக, பாதியில் அரை குறையாக ஓடி விடாமல் முழுமையாக சங்காபிஷேகத்தில் கலந்து சென்ற:
மலேசியாவில் உள்ள திரு சிவலிங்கம் அவர்கள் மற்றும் அவரின் மதுரையில் வாழும் உறவினர்கள் & நண்பர்கள்
மதுரையில் உள்ள கண்ணன் குடும்பத்தினர்
மதுரை ஜெயராமன் & சித்ரா குடும்பத்தினர்
மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கௌரவத்தலைவர் P சிவஞானம் அவர்களின் மனைவி கஸ்தூரி & மகள் பனிமலர் MBBS
இவர்களுக்கு அறக்கட்டளை நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. அவர்கள் அனைவருக்கும் இந்த நாள் பூஜை உபயதாரர்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர்:
P. வினோத்குமார் & சுபத்ரா
குழந்தைகள் கனுஷா & லெனிஷா
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் கௌரவ தலைவர்
MKP பாண்டுரெங்கன் & விஜயலக்ஷ்மி
சங்காபிஷேகம் 10/2/2023 மிகசிறப்பாக நடந்துமுடிந்தது..
சங்காபிஷேகம் 10 2 2023. உபாயம் வினோத்குமார் & சுபத்ரா குடும்பத்தினர் முழு புகைப்படங்களை பார்க்க கீழே லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்:-
https://photos.app.goo.gl/HeN1vKCasDeyqvPw6
விடியோக்கள் பார்க்க இங்கே கிளிக் செய்க
*********************************
முழுமையாக சங்காபிஷேகத்தில் கலப்பது
மேலே குறிப்பிட்ட அனைவரும் நாகரீகம் தெரிந்தவர்கள். அழைக்காமல் வந்தவர்களும், அழைத்து வந்தவர்களும் பாதியிலும், அரைகுறையிலும் ஓட வில்லை .
உண்மையில் வழிபடும் நோக்கம், அல்லது உபாயதாரர் பூஜையில் கலந்து கொள்ளும் நோக்கத்தில் வந்தனர். இதுவே பண்பட்ட நாகரீகம்.
இப்படி ஒத்துழைப்புடன் கலப்பதால், பூஜை செய்பவர்களுக்கோ, கலப்பவர்களுக்கோ சிரமங்கள் இருக்காது.
வந்தவர்கள் சிலர் மாலை வாங்கி வந்தனர். பலர் கோவிலுக்கு பல சங்குகள் வாங்கி கொள்ள நன்கொடை கொடுத்துள்ளனர்.
கோவிலில் பூஜாரி கோவில் கிரயத்துக்கு சங்கு வாங்க விரும்புகிறது என்று அறிவிப்பு கொடுத்தவுடன் 38 சங்குகளுக்கு உள்ள பணம் நன்கொடையாக வந்தது குறிப்பிடத்தக்கது.
வந்தவர்கள் அனைவரும் சந்தோஷமாக சென்றனர். கோவில் கமிட்டீ சில மரியாதை செய்தாலும், வந்தவர்களின் நோக்கம்:
முழுமையாக சங்காபிஷேகத்தில் கலப்பது
அவர்களுக்கு மரியாதை ஒரு சாதாரண போனஸ். அவ்வளவுதான்.
பிரச்சனைகள், குறைகள் எதுவும் பேசாமல் நிறைந்த பாசிட்டிவ் எனர்ஜியுடன் பக்தர்கள் சென்றனர்.
**********************
கோவிலுக்கு சங்குகள் தேவை படுகிறது
வரும் காலங்களில் சங்காபிஷேகம் செய்ய கோவிலுக்கு சங்குகள் தேவை படுகிறது.
10 2 2023ல் சுமார் 38 சங்குகள் கிரயம் செய்ய வசூல் சேர்ந்து உள்ளது. ஆரம்பத்தில் 108 சங்குகளை வைத்து சங்காபிஷேகம் செய்வது ஐதீக முறை என்பதால், சுமார் 125 சங்குகள் வாங்க வேண்டும்.
கோவில் 100 மில்லி குறையாமல் தண்ணீர் கொள்ளளவு அளவுக்கு சங்குகள் வாங்க திட்டமிட்டுள்ளது.
கோவில் ஒரு சங்கின் விலை 250 ரூபாய் என்று நிர்ணயித்து உள்ளது. கோவில் கமிட்டியிடம் ரூபாயாக கொடுக்கலாம்.
அல்லது, 100 மில்லுக்கு மேல் கொள்ளும் சங்கு பக்தர்கள் வாங்கியும் கொண்டு வரலாம். ஏற்றுக்கொள்ள படும்.
இன்னும் பெரிதாக செய்ய நினைத்தால், நல்ல விளைந்த சங்கும் கொண்டு வரலாம். இதன் விலை 1500, 5000, 1000 என்றெல்லாம் இந்த மாத ஆரம்பத்தில் ராமேஸ்வரத்தில் பார்த்தேன். அவர் அவர் விருப்பம் போல் கொடுக்கலாம்.
***********
சென்ற 1 1 2023 சங்காபிஷேக நிகழ்ச்சியை காண இங்கே கிளிக் செய்க