மீட்டிங்கில் கலந்து கொள்ள 28-8-2022ல் பறந்து வந்தது சரியா?
30 & 31 ஜூலை 2022ல் ஸ்ரீ செல்வ விநாயகர் அறக்கட்டளை மீட்டிங்கில் கலந்து கொள்ள ஒரு தொகை செலவு செய்து பறந்து வந்தது சரியா?
மீட்டிங்கில் கலந்து கொள்ள 28-8-2022ல் பறந்து வந்தது சரியா?
அதற்கு பதில் செலவு செய்த பணத்தை கோவில் வளர்ச்சிக்கு கொடுத்து இருக்கலாமே. அதனால், எனக்கு அலைச்சல் மற்றும் உடல் அசதியை தவிர்த்து இருக்கலாமே?
மேல் சொன்ன அனைத்தையும் விட மிக மிக முக்கியமான நேரத்தை மிச்சம் செய்து, இங்கு உள்ள வேலையே செய்து இருக்கலாமே?
இது போன்ற கேள்விகள் எனக்குள் ஓடிக்கொண்டு இருந்தது.
மீட்டிங் ஆரம்பித்தது முதல் நான் மருங்கூர் சென்றது தவறோ, என்ற ஒரு சந்தேகமும் இருந்தது.
***************************************
பிறகுதான் மெதுவாக புரிந்தது, நான் சென்றது அதி முக்கியமான, மிக சிறந்த முடிவு என்பது.
பல பல விஷயங்கள் புரிய ஆரம்பித்தது.
பல காரணங்களை, முன்னிட்டு, கமிட்டீ நெருங்கி செயல் இழந்து விட்டிருந்தது. கமிட்டீயிடம் உற்சாகம் இல்லை, இழந்து இருந்தது.
எனது அண்ணன் தாமோதரன் நிலைமையை புரிந்து, அவர் கூறினார்:
பல நிர்வாக சம்பந்த நுட்பங்கள் புரிந்து இருக்காது. வந்தது நல்ல முடிவு மட்டும் இல்லை. வருடம் ஒன்று இரண்டு முறை கோவில் நிர்வாக விஷயங்கள் பேசவும், வழிநடத்தவும் வருவது அவசியம்”
****************************************
பலவித குறைகளுக்கும், விமர்சனங்களுக்கும், டார்ச்சருக்கும் ஆளாகி, உயிரோட்டம் இல்லாத கமிட்டீக்கு வெறும் பணம் கொடுப்பது, அத்தனை பலன் அளிக்காது என்பதை உணர்ந்து கொண்டேன்.
மீட்டிங்கில் எடுத்த பல முடிவுகள், நிறைய செம்மைப்படுத்தி, மேம்படுத்தி, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியுள்ளது. அதாவது, ஒன்றிரண்டு முடிவுகள் தவிர்த்து, மற்ற எல்லா முடிவுகளையும் மேம்படுத்தாமல் உபயோகப்படுத்த முடியாது என்பது உண்மை.
எடுத்த முடிவுகளை விட மீண்டும், புத்துணர்ச்சியுடன் செயல் படும் உணர்வு வந்தது, மீண்டும் உயிப்பித்ததுக்கு சமம் என்று கருதுகிறேன்.
ஏன் எனில் கடந்த 36 வருடம் கோவில் செயல் இழந்தது தெரிந்ததே.
கமிட்டீ உறுப்பினர்கள், அனைவருக்கும் கீழ் கண்ட பொறுப்புக்கள் உள்ளது:
1) குடும்பம்
2)அலுவல் & வருமானம்
இதை தாண்டி, வழிய வந்து, சொந்த செலவில் நிறைய கோவில் சேவை செய்கின்றனர்.
நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டாலும், மன உளைச்சல் கமிட்டீ செயல் படும் உறுப்பினர்களுக்கு வராத வண்ணம் நடப்பது மாபெரும் புண்ணியம்.
நன்மை செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை. தொந்தரவு கொடுக்காமல் இருப்பது மிக புண்ணியம்.
நமது வாரிசுகளுக்கும் புண்ணியம். குடும்ப விருத்திக்கும், செழிப்பதுக்கும் மிக அவசியம்.
நினைவு இருக்கட்டும் கமிட்டீ உறுப்பினர்கள் சம்பளம் வாங்காமல், கோவிலுக்கு சேவை அல்லது தொண்டு செய்கின்றனர்.
அவர்கள் சேவைக்கும் தொண்டுக்கு இடையூர் செய்து கெடுக்கும், செயலை முடக்கி போடும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாமல் இருந்தாலே, ஒரு கோவில் காட்டும் புண்ணியம் கிடைத்து விடும்.