இரண்டு தினங்களாக, மிக சிறப்பாக நடத்தி தந்த கிராமத்து அணைத்து மக்களுக்கும் MKP பாண்டுரங்கன் & விஜயலக்ஷ்மி குடும்பத்தினர் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
செல்வ விநாயகர் கோவில் கமிட்டி அணைத்து உறுப்பினர்களும், மற்றும் கிராமத்து மக்களும் இவர்கள் வருகையை மிக சிறப்பாக கொண்டாட விரும்பிய நோக்கம், இவர்களின் 2019ன் ஒரு சிறிய சந்திப்பு, 50 லட்ச செலவில் ஒரு கோவில் அமைந்த காரணம்.
கிராமத்து மக்கள் தங்களது நன்றியை தெரிவிக்க அவர்களுக்கு தெரிந்த முறைப்படி, எப்படி பல வீ ஐ பி, அரசியல் உறுப்பினர்களை வரவேற்பார்களோ, அப்படியே வரவேற்றனர்.
MKP பாண்டுரங்கன் & விஜயலக்ஷ்மி இருவரும், எந்த குறையும் சொல்லாமல், கிராமத்து மரியாதையை முழுமையாக ஏற்றுக்கொண்டதன் விழி கிராமத்தார்களையும் கௌரவப்படுத்தினார்கள்.
வரவேற்ப்பையும் சரி, இது சரி, அது தவறு என்று ஏதுவும் கூறாமல், அணைத்து கிராமத்து முறையையும் கலாச்சாரத்தையும், முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.
MKP பாண்டுரங்கன் கூறினார்:
“ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர், இந்திய வருகை புரியும் பொது, அவரின் ஆதரவாளர்கள், இனிப்பும், ஜெர்மனி வரும்போது உப்பும் தட்டில் வைத்து வரவேற்பார்களாம். இந்தியாவில் உப்பை ஏற்க மாட்டார்கள். ஜெர்மனியில் இனிப்பை ஏற்க மாட்டார்கள். ரவிசங்கர் இரண்டு நாடுகள் அல்ல, அணைத்து நாடுகளின் கலாச்சாரத்தை மதிப்பவர்.” முக்கியமாக விஜயலக்ஷ்மி அவர்கள், மிகவும் நன்றியுணர்வுடன் மக்களை நேசிக்கின்றார். அவரின் மாமானார், ஊர் கோவில் மீது ஆழ்த்த பற்றும் வந்து விட்டது.
36 வருடம் முன், மாமனார் கோவில் காட்டியது, கோவில் மருங்கூரில் இருப்பது தெரிந்து இருந்தாலும், இந்த 2019 க்கு பின் தான், மருங்கூர் கோவில் மீது ஒரு பற்றும் நேசமும் வந்துள்ளது என்று உணர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.