அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா அழைப்பிதழ் 2022

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா அழைப்பிதழ்

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா அழைப்பிதழ் 2022

23 மார்ச் 2022 சிறப்பு வருஷாபிஷேக விழா

2 ஏப்ரல் 2022 வருஷாபிஷேக திருவிழா

அனைவருக்கும் வணக்கம்

செல்வ விநாயகர் கோவில் வருகிற 23.3.2022 தேதி வருஷாபிஷேகம் நடைபெற இருக்கிறது .. அன்றைய நாளில் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை சார்பாக அன்னதானம்  வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம் . இந்த அன்னதானத்திற்கு அனைவருடைய பங்களிப்பு இருக்கவேண்டும் என்பது அறக்கட்டளை எண்ணம் .. தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அந்த அன்னதானத்திற்கு நன்கொடையாளர் வரவேற்கபடுகிறது . யாரேனும் நன்கொடை கொடுக்க விரும்பினால் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை தொடர்பு கொள்ளவும் .

அன்னதானம் நன்கொடை அழைப்புக்கு …

8778949742

9600460828

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா மேலமருங்கூர் ஊராட்சி மேலமருங்கூர் கிராமத்தில் கேட்ட வரம் தந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் கடந்த ஆண்டு உயர்திரு பாலுச்சாமி செட்டியார் செல்லம்மாள் ஆட்சி அவர்களுடைய  வாரிசுகளின் பெருமுயற்சியால் 36 ஆண்டு பிறகு கடந்த ஆண்டு 2.4.2021 தேதி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது வரை செல்வ விநாயகர்  தின பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டை முன்னிட்டு மேலமருங்கூர் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளையின் சார்பாக செல்வ விநாயகருக்கு சிறப்பான முறையில் வருஷாபிஷேகம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இந்த வருஷாபிஷேகத்திற்கு நன்கொடை வரவேற்கபடுகிறது. நன்கொடை செய்ய விரும்புவர்கள் செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை தொடர்பு கொள்ளுங்கள். 

இவண்

செல்வ விநாயகர் கோவில் அறக்கட்டளை

தொடர்புக்கு.. 9600460828

8778949742

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய வருஷாபிஷேக திருவிழா அழைப்பிதழ்

23 மார்ச் 2022 சிறப்பு வருஷாபிஷேக விழா

2 ஏப்ரல் 2022 வருஷாபிஷேக திருவிழா

மேலும் தகவலுக்கு குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும்

& பூஜை ஏற்பாடுகளுக்கு:

திரு.நிவாஷ்: +91 9600460828/8778949742

நான்கொடை அன்னதானம் போன்ற சேவையில் பங்கேற்க விரும்புபவர்கள்:

திரு.நிவாஷ்: +91 9600460828/8778949742

SSV Bank Account

Sree Selva Vinayagar Arakkattalai

Indian Overseas Bank

KalayarKovil Branch

Account No. 187201000022405

IFSC Code: IOBA001872

Contributed From Sivanganam

 

முதல் ஆண்டின் மேலமருங்கூர் ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில். 1

ஆம்! மூலக்கடவுள் ஸ்ரீ செல்வ விநாயகர்! கோவில் கடைக்கோடி கிராமத்தில், அரசாங்க பதிவு பெற்ற, அறக்கட்டளை நிர்வாக அமைப்போடு, பட்டி தொட்டிக்கெல்லாம் ஒரு முன் உதாரணமாக ,புதிய சகாப்தத்துடன்,  மிக சக்தி வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆலயமாக அமைந்துள்ளது.

நூறாண்டு பழைமை கொண்ட மூல தெய்வ விநாயகப்பெருமான் மூன்று தலை முறை காணாத தின பூஜை, மாத விசேச சதூர்த்தி பூஜை ,பெளர்ணமி பூஜை, சங்காபிஷேகம்,வேத மந்திரங்கள்,விளக்கு பூஜை, ஓர் ஆண்டுக்குள் பல கணபதி யாகம், ஒவ்வொரு பூஜைக்கும் அன்னதானம் வழங்குதல்,வித விதமான வண்ண வண்ண மாலைகள், ஆண்டு பூஜை இவை அனைத்தும் சுற்று வட்டார கிராம புர ஆலயங்களில் நடை பெறாத ஒரு சரித்திரம்! அதன் ஆழுமை சக்தி மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு மெருகூட்டியுள்ளது என்றால் மிகை ஆகாது! ஏன் இன்னும் ஒரு பெருமை படும் கருத்தை பதிவு பண்ணலாம், மேல மருங்கூர் விநாயகர் ஆலயத்தில் நடந்தது வரும் பூஜை புனஸ்காரம் போல், பக்கத்து கிராமங்களில் உள்ள ஆலயங்களில் இது போன்ற ஆன்மீக நிகழ்சிகள் நடத்த முயற்சிகள் செய்வதாக அறிகிறோம். கொண்டாடும், இடத்தில் இறைவன் குடி கொள்வான் என்பதர்க்கு, இதுவே பெரிய அடையாளம்!.

வழி தெரியாது, கண்மாய் கரையோர மேட்டில் இயற்கை தாக்கத்திர்க்கும், பறவைகள் எச்சத்திர்க்கும், மனித இயலாமைக்கும் காரணம் காரியம் பல கூறி நாதியற்று இரண்டு தலை முறை தாண்டி பொறுமை காத்து ஸ்ரீ செல்வ விநாயகர் அருள் பாலித்தார் என்பது மறுக்க முடியாத உண்மை!.

முதல் ஆண்டில் மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் 2

1900ஆண்டு என்று எடுத்துக்கொள்வோம்! மூல விநாயகர் எப்படி வந்தார்?, ஏன் மேல மருங்கூரில் கண்மாய் கரை ஓரம் குடி கொண்டார்?, அதை நிலை நிறுத்தியவர்கள் யார் ,யார் என்ற சரித்திர ஆய்வு ஆதார பூர்வமாக இல்லை!. ஆம் யாரோ ஓருவர் விநாயகரை மேல மருங்கூரில் முதல் ஆன்மிக வாதி, கண்மாய் கரையில்  நிலை நிறுத்தியுள்ளார்! அந்த ஆன்மீக மனிதருக்கு இன்றைய தலை முறையினர், நன்றி கடன் பட்டுள்ளனர் என்றே சொல்லலாம்!.

 1984ல் மு.கி.பால்ச்சாமி செட்டியார் , மேல மருங்கூர் கண்மாய் மேட்டில் கிழக்கு பார்த்து இரண்டாவது ஆன்மீக வாதி தன் எண்ணத்தில் தோன்றியவாறு கோவிலாக அமைத்தார்.  ஆம்! மழை, வெயில், எச்சம் இவையில் இருந்து விடு பட்ட விநாயகர்!  தனக்கான ஆலயத்தில் அமர்ந்தார்.

நாதியற்று இருந்த விநாயகர் தனக்கென்று ஓர் இருப்பிடம் பெற்று   நிலை நிறுத்தி வந்தார்! அதை தவிர மக்கள் தன் சுய நலம் கருதி அவ்வப்போது வருடத்தில் சில குறிப்பான பூஜை நடந்தி வந்தனர். முக்கிய குறிப்பிட்ட பூஜையை  தவிர ,பராமரிப்பு என்பது கொஞ்சமும் இல்லாது போனது!  அது சிலர் சர்வாதிகாரம் காரணத்தால் பராமரிப்பு இல்லாது ,

 நிலை குலைந்தது!.இதனால் பல காலமாக மக்கள் மனம் குமுறலுக்கு ஆழ்ளானார்கள்.

மக்களால் சர்வதிகாரத்தை தாண்ட இயலாத காலகட்டத்தில்,புதிய சகாப்தமாக 2018ல் விநாயகர் சக்தி என்று சொல்லலாம்!

முதல் ஆண்டில் மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் 2-அ

மு.கி.பால்ச்சாமி செட்டியார் வாரிசு மூத்த புதல்வர் தற்செயலாக மேல மருங்கூர் சென்றவர், கோவில் கிடப்பை கண்டு வருத்தபட்டு, கிராம மக்களோடு கூட்டு முயற்சியுடன் ,வெளிநாடு,வெளி மாநிலம்,உள்ளூர் கிராம மக்கள் இணைந்து 2019 ல் மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கட்டுவதற்க்கு தச்சை செய்யப்பட்டது. இப்படி விநாயகர் மீது பக்தி கொண்டவர்கள் பொருளாதார உதவிகளும், உடல் உழைப்பும், நிர்வாக அமைப்புடனும் ,அரசாங்க உரிமை பெற்ற அறக்கட்டளை நிர்வகிப்புடன், சுற்றி உள்ள கிராமத்துக்கு ஓர் எடுத்துக்காட்டுடன்! பெருமையுடன்! அழகு தோற்றத்துடன்! அமைய பெற்றது மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில்.

மேல மருங்கூர் ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலை கட்டுமான பணி பொறுப்பை சிவகங்கை ஸ்தபதி சண்முகம் ஐயா அவர்கள் ஏற்றுக்கொண்டார். தன் திறமையை காட்டி அழகு பார்ப்பவரை வியக்க வைக்கிறது.

முதல் ஆண்டில் மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ  விநாகர் கோவில் 3

முதல் ஆன்மிக வாதி விநாயகர் எனும் விதையை மேல மருங்கூரில் கண்மாய் கரையில் போட்டார், இரண்டாவது ஆன்மிக வாதி விநாயகர் எனும்  மரக்கன்றாய் வளர்ந்ததை , மேல மருங்கூர் கண்மாய் மேட்டில் நட்டு வைத்தார்.இன்று பெரிய அரச மரமாக

பல கிளைகள் போன்று மூன்றாவது ஆன்மிகவாதிகள் அதிகம் உதயமாகி உள்ளார்கள். ஆன்மீக மக்கள் கல்வி ஆற்றல் பெற்று பல துரைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்,  மக்களிடம் அதிக வளர்சியும், அதீத பக்தியும் ஆழ்மனதில் குடி கொண்டுள்ளது.அதன் வெளிப்பாடே 2021ல், புதிய பொழிவுடன் புதிய ஆலயம் கம்பீர தோற்றத்துடன் கட்டப்பட்டு, கும்பாபிசேகம் மிகவும் சிறப்பாக கோலா கலமாக கொண்டாட பட்டது.கொரோனா எனும் கொடிய நோய் தாக்கத்தால் உலகை, ஆட்டிக்கொண்டிருந்த நேரம். கொரோனா தாக்கத்தால் 2/7/2020 நடை பெற இருந்த கும்பாபிஷேகம் ,9மாதம்

சுணக்கத்துக்கு பிறகு,  2/4/2021 மிக சிரத்தையுடன் அரசு உத்தரவுடன்,காவல் துறை பாதுகாப்புடனும், கோலாகலமாக மேல மருங்கூர்  மக்கள் தன் ஊரில் 35ஆண்டு காலத்திற்க்கு பிறகு எதிர்பாராத விழாகோலம் கண்டது. மேல மருங்கூர் மக்கள் பேர் ஆனந்தம் அடைந்தாக மக்கள் , இன்றும் பெருமை படுகின்றனர்.

அதுவரை மக்கள் காணாத 48நாள் மண்டலாபிஷேகம், பெண்கள் சிரத்தை எடுத்து நடத்திய விளக்கு பூஜை பிரார்த்தனை. மக்கள் மனதை மிகவும் கவர்ந்து. 365நாள் தின பூஜை விநாயகரின் சக்தியை வலுப்படுத்துகிறது என்றால் அந்த மூலவரை காண்பவர் அறிகின்ற உண்மை. பெளர்னமி பூஜை, சங்கடஹர சதூர்தி மாத இருமுரை அன்னதானத்துடன் பூஜைகள் நடை பெற்று வருகிறது. வருட ஒரு முறை பால் குடம் ஓன்று கூடி எடுத்து வருவது விநாயகப் பெருமான் மறுசக்தி அடைகிறது.

முதல் ஆண்டில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில்4

மேல மருங்கூர் ஸ்ரீசெல்வ விநாயகர்  தின பூஜைக்கு உண்டான செலவுகளை, மாதம் ஒருவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டது . அவர்களது ஆன்மிக பயணத்தை காட்டுகிறது. அதனை சரியாக செயல் படுத்தி வரும் அறக்கட்டளை நிர்வாகம். கிராமமாக இருந்தாலும் அறக்கட்டளை நிர்வாகம் சிரத்தையுடன் செயல் படுவது பாராட்டக்கூடியது.

வழி இல்லாமல் காத்துக்கிடந்த ஸ்ரீ செல்வ விநாயகர் ,இன்று வழி விட அருள் பாலிக்க வழி மீது விழி வைத்து காத்துக்கொண்டு இருக்கிறார் மக்களுக்காக!. ஆம்! தனக்கு உண்டான பூஜை பூனஸ்காரம் கிட்டுவதற்கு நூறாண்டுகள் மேல் பொறுமையுடன் காத்திருந்தார் விநாயக பெருமான்! அதே போன்றுதான் நம் சமூகம் மென்மேலும் வளர்சி அடைய வேண்டும் என்றால்! கேட்ட வரம் தரும் விநாயகப் பெருமானுக்கு தின பூஜை சிறப்பாக நடத்தியாக வேண்டும்.நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கிய மல்ல! விநாயக பெருமானை எப்படி பூஜை புனஸ்காரத்துடன் போற்றுகின்றோம் என்பதே மிக மிக முக்கியம் வாய்ந்தது. இனி வரும்  காலம் தாமதம்  ஆகாமல் சரியான நேரத்தில் அனைவரும் பூஜைகளுக்கு அறக்கட்டளை நிர்வாகியிடம் முன் பதிவு செய்வோம்.

 மேல மருங்கூர் ஸ்ரீசெல்வ விநாயகர் ஆசீர்வாதம் பெறுவோம்.  வேண்டுவதை மேலமருங்கூர் ஸ்ரீசெல்வ விநாயகர் பாதத்தில் முழு நம்பிக்கை வைத்து! வேண்டிய வரம் கிடைக்கும் வரை விநாயகர் பாதம் சரணடைவோம்!

முதல் ஆண்டில் ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் 5

நாம் ஒன்று கூடி ஒர் ஆண்டுக்கு முன் கோவிலை கட்டி முடித்ததை போன்று, கோவிலை சுற்றி சில வேலைகள் மக்கள் வசதிக்காக உதாரணமாக , அன்னதானம் பரிமாற மேடை அமைப்பது, அல்லது பொங்கல் வைக்க சரியான  இடம் அமைப்பது, சிறு குழந்தைகள் மாலை நேரம் உட்கார்ந்து படிக்க  இடம் அமைத்து கொடுப்பது. இப்படி மக்கள் சேவை மகேசன் சேவை என்பதாலும், வங்கி வைப்பு தொகை திட்டம் குறிப்பிட்ட தொகை வைப்பாக வைத்தால் அதன் வட்டி வருவாய் கோவில் பூஜைகளுக்கும்,மராமத்து வேலைக்கும் ஒரு எடுத்து காட்டாக மழை பெய்தால் கோவிலுக்குல் சாரல் அடிப்பதை தவிர்க்க ,கோவிலை சுற்றி மூன்று பக்கமும் நிழற் குடை அமைக்க பெரும் உதவியாக அமையும் என்பதில்  எந்த வித ஐயப்பாடும் இல்லை.

கோவில் நிர்வாகம் பன்னுவதர்க்கும் பொருளாதாரம் மிக முக்கிய பங்கு வகிப்பதால்,மக்களுக்கு அதிக சுமைகளை ஏற்படுத்தாமல் நல்ல பல திட்டம் வகுத்து ஆலயத்தை மேம்படுத்த அறக்கட்டளை நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஊருக்கு தகுந்த தொண்டும்,விரலின் வீக்கம் அறிந்து கோவில் சேவைகளை செவ்வன செய்து வரும் மேல மருங்கூர்ஸ்ரீ செல்வ விநாயகர்  அறக்கட்டளை சேவைக்கு நன்றி.

அறக்கட்டளை கடந்த ஒரு ஆண்டில் நல்ல சிறந்த சேவைகளை வழங்கி வருவது பாராட்டக்கூடியது.இந்த சேவை மற்ற பக்கத்து கிராமங்களுக்கும் தொடர்ந்து  ஆற்ற அறக்கட்டளை நிர்வாகிகளை மனதார பாராட்டுகிறேன்.

வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன், வளர்க சிறப்புடன்

இப்படிக்கு பா.சிவஞானம்

நன்றி,வணக்கம்.

வருஷாபிஷேக திருவிழா அழைப்பிதழ் 2022

வருஷாபிஷேக திருவிழா அழைப்பிதழ் 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *