வரைந்தது 1
பா. சிவஞானம் @ சினா வானா
வரைந்தது 1 ஏதும் அறியாத ஊர்
வரைந்தது 1 means சென்ற தேடல் பாதை எது வாகினும், பரம்பரை பிறந்த இடம் மேலமருங்கூர். என் நன்றி கொண்டார் நல் உள்ளங்கள் ஒன்று கூட , 2019ல் மிக பெரிய சிறந்த வாய்ப்பு அமைய பெற்றது.
அறியாத ஊர்
ஆம் ஶ்ரீசெல்வ விநாயகர் அதீத பக்தி கொண்ட மக்கள் அனைவரும் சேர்ந்து திருப்பணி துவக்கம் கண்டது. அவரவர் தன்னுடைய பங்காக பொருளாதார உதவி, பொருள் உதவி, உடல் உதவி, நிர்வாக செயலாக்கம் இப்படி ஏதும் அறியாத ஊரில்! மாபெரும் வெற்றி படைப்பாக ஆத்மார்த்தமாக, பக்திபரவசமாக ஒரு குக்கிராமத்தில் அழகு மிக்க ஒரு ஆலயம் உருவாக்கம் கண்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணம்
குட முழுக்கு 2021ஆம் ஆண்டு ஒரு சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது. பக்கத்து கிராம மக்கள் வியக்கும் வண்ணம் அசந்து போனார்கள். அது தான் மேலமருங்கூர் ஶ்ரீசெல்வ விநாயகர் கோவில். சுமார் 36 ஆண்டு காலமாக பல தவிர்க்க முடியாத காரணத்தால் மராமத்து கூட பார்க்க முடியாத சிக்கல் உருவாகி இருந்தது.
அப்படி என்ன காரணம் என்று ஆய்வு செய்ததில் பொருளாதார நிலை குறித்து சிக்கலா என்று பார்த்தால், முதலீடு தடையாக இல்லை என்பது ஊர்சிதமானது. காலம் காலமாக தொடரும் மனித நோய் எண்ண தடைகளும், சதிநாசம் தான் முழுமையான காரணம் என தெரிய வந்துள்ளது. சுமார் நூற்றி ஐம்பது பேர்கள் கொண்ட மேலமருங்கூர் மக்களிடம் கோவில் கட்ட தன் ஆர்வத்தையும், ஆதரவும் கொடுத்து வந்தனர், ஒரு நபரை தவிர்த்து.
ஆம் தவிர்க்க பட்ட அந்த ஒரு நபரால் 36ஆண்டுகள் தன் தனிபட்ட விருப்பு வெறுப்பால் மனித குலத்தை, சர்வதிகாரம் கொண்டு ஆளவேண்டும் என்று முன்னவன்! மூத்தவன்! பாவக்கணக்கை, கிராம மக்கள் பட்ட துன்பம் ஒன்றா இரண்டா? அடுத்து என் மனம் வரைந்த கணக்கை பார்ப்போம்.
நன்றி கடன்
ஆண்டு தோறும் விவசாயா தினம் மிக விமரிசையாக உலக முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். ஏன் நம் தமிழ் மக்கள் தை திருநாளை, மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம். ஒரு விவசாயி “சேற்றில் கால் வைத்தால் நாம் சோற்றில் கை வைக்கலாம்” பொன் மொழிகிறேன். ஒரு சாண் வயிற்றுக்கு பசி என்ற ஒன்றை வைத்து விவசாயிகளுக்கு நாம் காலத்துக்கும் நன்றி கடன் பட்டுள்ளோம் என்பது தின்னம்.
விவசாயி
உழவர்கள் அவர்களின் உழைப்பு மிக முக்கியம் வாய்ந்தது. அவர் நேரம் காலம் பாராது தன் உடல் வேர்வை துளி மண்ணில் முன் வைத்த வண்ணம் இருக்க வேண்டும்.
தோட்டம் தொரவாக இருந்தாலும் வயற் காடாக இருந்தாலும், தான் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, பருத்தி சாகுபடி செய்தாலும், கடலை சாகுபடி செய்தாலும், கரும்பு சாகுபடி செய்தாலும், நெல் சாகுபடி செய்தாலும், பழ வகை தோட்டமாக இருந்தாலும்,காய் கனி வகையாக இருந்தாலும், கலை எடுப்பதற்க்கும், பக்குவமாக மருந்து அடிப்பதும் விதை போட்டு அறுவடை முடியும் வரை காலத்துக்கு காத்திருந்து தட்ப வெப்ப சூல் நிலைமை அறிந்து மனித பசிக்கு வேலை பார்க்கும் ஜிவிகள் விவசாயிகளே!
இந்த தருவாயில் மீனவர்களையும் மறக்க இயலுமா?!
உயிரை பணையம் வைத்து வாழ்வாதாரம் நடத்தும் உழைப்பாளிகள்.
கடவுளும் உழைப்பாளி விவசாயும்
கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று பெரியவர்கள் வாக்கு. ஒரு விவசாயி தன் மண்னை நம்பி தன் வாழ்வை நடத்துபவன்.
அவனுக்கு ஒரு கஷ்டம் வந்தாலும், மனபாரம் வந்தாலும் தன் ஆதங்கத்தை வெளிபடுத்த, தன்னை தானே தேற்றிக்கொள்ள, அவனால் தன் வேலையை போட்டு விட்டு பெரிய பெரிய கோவிலுக்கு போகமுடியாத நிலை.
தன் சுய காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து கொள்ள முடியாதவன். விவசாயம் செய்யும் ஒவ்வொரு விவசாயியும் தன் குடும்பத்துக்கு மட்டும் உழைக்க வில்லை, வயிறு உள்ள அத்தனை உயிர்களுக்காக உழைக்கிறான்.
அவனை அவன் அறியாமல் ஊருக்கே சோறு போடுகிறான் விவசாயி! அந்த உழைக்கும் ஜுவனுக்கு நம்மால் அந்த பாமர மக்களுக்காக ஒரு ஆலயம் கட்டிக்கொடுத்து நமது நன்றி விசுவாசமாக இருக்கிறோம் என்பதை உணர்வோம்.
பிறந்த ஊரின் ஒற்றுமை உணர்வை பறை சாற்று வோம். மனதில் வரைந்த என் எண்ண ஓட்டம் அடுத்த தொடர்ந்து பார்ப்போம்.
இப்படிக்கு
பா. சிவஞானம்.
சினா வானா
வரைந்தது2