மனதில் வரைந்த மேலமருங்கூர் விநாயகர்! வரைந்தது 2

மனதில் வரைந்த மேலமருங்கூர் விநாயகர்! வரைந்தது 2

Mr. P. Sivanganam
Mr. P. Sivanganam பா. சிவஞானம் @ சினா வானா

        வரைந்தது 2

 

வரைந்தது 2- நம்பிக்கை பலம்

 

 

யானை, பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில்!  யானை  தன் பலம் அறியாது இருக்கும் வரை பாகன் அடக்கி ஆள்வான், மதம் பிடித்து தன் பலம் அறிந்த யானை, மறுகணம் பாகன் சின்னா பின்னமாகி விடுவான்.

அதே போன்று நூற்றி நாற்பத்தொன்பது பேர் முப்பத்தாறு வருடமாக விநாயகர் மீது வைத்த நம்பிக்கை, தன்னை துஷ்பிரயோகம் செய்தவனை தூக்கி எறிந்து விட்டு, தன் மீது அதீத பக்தி கொண்டவர்களை, கிராமம் கடந்து, ஊர் கடந்து, மாநிலம் கடந்து, நாடு கடந்து, கண்டம் கடந்து தன்னை 36 வருடமாக சரியான முறையில் கவனிப்பார் அற்ற நிலையில் இருந்த விநாயகர், பக்தியும் பாசமும் மிக்க மனிதர்களை  ஒன்று இணைத்து, விநாயகரின் தேவை போதும் என்ற அளவுக்கு தனக்கென்று  ஓர் புதிய ஆலயம், அசத்தலான முறையாக வேத பாராயணம், கண்கவர் பூ மாலை அலங்காரம், ,நாதஸ் வரம், சண்ட மேளம், சிறந்த  பேச்சாளர், கிராம மக்கள் விரும்பிய நாடகம், அழகு விளக்கு தோரணம் ஒரு கடைக்கோடி கிராமக்களின் பேர் ஆனந்த மழையில் நனைந்தனர்.

 

வரைந்தது 2-குதூகலத்தில் விநாயகர்

 

48நாள் வரலாறு காணாத வகையில் மண்டாலாபிஷேகம்  வேதம் பாடி, அர்சனை செய்து அபிஷேகம் ஆராதனையுடன் சீரும் சிறப்புமாக வாகை சூட பட்டது விநாயகர் சக்தியை உணர வைக்கிறது. .

 

மேல மருங்கூர்மக்கள்  சரித்திரம் படைத்துள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது. அத்தோடு மட்டுமா!

மேலமருங்கூர் மகளிர் அணி அசந்தவர் அல்ல என்பதை விளக்கு பூஜை மிக நேர்த்தியாக ஒற்றுமையாக ஐயர்களும் வியக்கும் வண்ணம் கிட்ட தட்ட 270 பேர் கலந்து பூஜைகள் மிக சிறப்பாக நடத்தி உள்ளார்கள்.

குட முழுக்கு பத்து  நாட்களும் முன் மகளிர் அணி கும்மி அடித்து பாட்டு பாடி விநாயகரை ஆனந்தம் அடைய செய்தனர்.

அனுதினமும் தின பூஜை நாள் ஒன்றுக்கு ஒரு தடவை எளிமையான முறையில் சிறப்பாக நடந்து வருகிறது. குதூகலம் கொண்ட விநாயகர் நூறாண்டுக்கு பின் முழு மரியாதையும் பெற்றுக்கொண்ட பிறகு  அனைவரையும் நல் வழி படுத்துவார் என்ற நம்பிக்கை உறுதியாகிறது.

 

வரைந்தது2-உணர்ந்த உண்மை

 

 

ஏனோ தானோ என்ற அடிப்படை வசதிகள்  இல்லாது கடந்த நூற்றாண்டில் விநாயகர் மேலமருங்கூர் மக்களையும், மக்கள் விநாயகரையும் வாழ்ந்த காலம் சில சரிதையை சொல்லியுள்ளது.

அதில் ஆழமான கருத்து என்று  எடுத்துக்கொண்டால், மக்கள் விநாயகரை கவனித்தார்களா என்பதை விட , விநாயகர் மேலமருங்கூர் பரம்பரை மக்களை கவனித்துள்ளார் என்ற சிறப்பு மேலமருங்கூர் மக்கள் உணர்ந்த உண்மை.

உள்ள மெள்ளாம் நீக்க மற நிறைந்த ஶ்ரீசெல்வ விநாயகர் . இதற்க்கு மாற்றுக்கருத்து மக்களிடம் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லலாம்.

 

வரைந்தது2-சக்தி மிகுந்த விநாயகர்

 

கண்மாய் மேட்டில் இருந்த கால முதல், ஒரு பூஜை புனஸ்காரம் இல்லாத கால கட்டத்தில் விநாயகரின் அருளை மக்கள் அதிகம் உணரப்பட்டது.

அதில் ஒரு சிலர் நடு நிலை குடும்ப வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, விவசாய வளர்ச்சி,வெளி நாடு சென்று கண்ட வளர்ச்சி, வெளி மாநிலம் சென்று கண்டதை அடுத்து, 1982 கண்மாய் மேட்டில் கோவில் கட்டப்பட்ட பிறகு, இன்னும் சிலர் வருடம் ஒரு முறை ஆண்டு பூஜையாக மார்கழி மாதம் 30நாட்களும் கிராம பொதுவாக செய்து வந்தனர்.

80களில் உள்ள குழந்தைகள் 2020ல் ஒரு நடு  நிலையான வளரச்சியும், போதுமான வருவாய் ஈட்டும் வசதி வாய்ப்பு கிட்டியுள்ளது, இந்த மேலமருங்கூர் மக்கள் மைந்தர்களுக்கு.

பெண்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வம்சம் வளர்ச்சி  செல்வ விநாயகர்  செல்லமாக அவர் அவர் வசதி வாய்ப்புக்கு ஏற்ப பக்குவமாக நடந்தேறியது என்பதில் எந்த வித ஐய்யப்பாடும் இல்லை.

கேட்கும் வரம் சரியாக  இருந்தால் சரியான நேரத்தில்  சரியாக செய்து கொடுப்பார். சூட்சுமம் மாக சொல்லலாம்.

 

வரைந்தது2-விநாயகர் தேவை

 

2019ல் மேல மருங்கூர்  மக்கள் கோவிலை கட்டிக்கொடுத்தால் போதும் எண்ணம் ஓட்டமாக இருந்தது.

சக்தி மிக்க விநாயகர், செயல் அற்ற நிலைமையை நினைத்து வருத்தபடுவதை காட்டிலும், விநாயகர் அடிப்படை தேவை என்ன என்பதை பூர்த்தி செய்ய முடுவு எடுக்கப்பட்து. அறக்கட்டளை நிறுவப்பட்டது.

மேலமருங்கூர் சுற்று வட்டார பகுதிகளில் எங்கும் இல்லாத  ஒன்றை  முதலில் மக்களுக்கு அறிமுகம் பட்ட பாடு கொஞ்சமா?!

அதன் பிறகு விநாயகர் தன் தேவைகளை நிறைவேற்றப்பட்டது. இனி ஆலயம் தொழுதல் நன்று என்ற எண்ணத்தோடு மனதில் வரைந்த மேலமருங்கூர் விநாயகர் என் தேவைகளை பூர்த்தி செய்வார் என்று சொல்லி நிறைவு செய்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு

பா. சிவஞானம். என்ற சினா வானா.

 

வரைந்தது 1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *