மேல மருங்கூர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10/9/ 2021ல் மிக சிறப்பாக நடந்தது

விநாயகர் சதுர்த்தி விழா 10/9/ 2021 மிக சிறப்பாக நடந்தேறியது.

விநாயகர் சதுர்த்தி விழா 10/9/ 2021 முன் இதுவரை இப்படி ஒருங்கிணைந்து இதுவரை கொண்டியது இல்லை என்பதே உண்மை.

 

எங்கள் மேல் மருங்கூர் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் மிகவும் வேண்டுதல் வைத்து நிறைவேறுவதற்கு சிறப்பான கோவில்.இதன் சக்தி தெரியாத நிலையில் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது வரட்டு கௌரவத்தை நிலைநிறுத்த இந்த அற்புதமான விநாயகரை கவனிக்காமல் வாழ்ந்தது வேதனை அளிக்கிறது ஓரளவு நல்ல சூழலில் விநாயகரின் மீது பற்று கொணடு வரட்டு கௌரவத்தை வேரோடு சாய்ப்பதற்கு நினைத்து விழிபிதுங்கி கொண்டிருந்த நேரத்தில் முப்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து கோவிலே இல்லாத கிராமத்தில் கோவிலை கட்டிக் கொடுத்த MKPஐயா செல்லம்மாள் இவர்களின் மகன்கள் உயர் திரு பாண்டுரங்கன் ஐயா அவர்கள் உயர் திரு சிவஞானம் ஐயா அவர்கள் கிராமத்திற்கு இந்த விநாயகர் அருளால் வரப்பெற்று அதன் மூலமாக நல்ல ஆலோசனைகளை வழங்கி இன்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடுவதற்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது என்று மனமுருகி தினம் தினம் மகிழ்ச்சி அடைகின்றோம் என்றும் செல்வ விநாயகரின் அருளால் அனைத்து மக்களும் இந்த ஊரில் மீண்டும் கோவிலை அமைத்து கொடுத்ததற்கு MKPஐயா அவர்களின் பேரன் பேத்தி களுக்கும் கௌரவ தலைவர் கள்உயர் திரு பாண்டுரங்கன் ஐயா உயர் திரு சிவஞானம் ஐயா மற்றும் பத்மா அக்கா குடும்பத்தார் சித்ரா தேவி அக்கா குடும்பத்தார் மற்றும் கோவில் கட்ட உதவி செய்த வெளிநாடு வாழ் நல்ல உள்ளங்கள் மற்றும் உதவிய பொது மக்கள் மருங்கூர் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இந்த நாளில் செல்வ விநாயகர் அறக்கட்டளை சார்பாக விநாயகர் சதுர்த்தி நாளில் நல் வாழ்த்துக்கள் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க வாழ்க??????

மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் சேவகன்
பார்த்திபன்

 

K.செல்வகணேசன் ஆகிய எனக்கு பிறந்தநாளும் எங்களின் புதிய வீடு கிரகப்பிரவேஷமும்

அனைவருக்கும் வணக்கம்
இன்று விநாயகர் சதூர்த்தி.இன்றைய நன்னாளில் K.செல்வகணேசன் ஆகிய எனக்கு பிறந்தநாளும் எங்களின் புதிய வீடு கிரகப்பிரவேஷமும் நம் விநாயகர் அருளோடு நல்ல முறையாக நடந்தது.ஆகவே இன்றைய நல்ல நாளில் எங்களது குடும்பத்தின் சார்பாக மேலமருங்கூர் ஊர் மக்களுக்கு அன்னதானம் மிகச்சிறப்பாக செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி
இப்படிக்கு
K.செல்வகணேசன்-மாரீஸ்வரி

விநாயகர் சதுர்த்தி நாளில் காலையில் மேல் மருங்கூர் கிராமத்தை சேர்ந்த உயர் திரு செல்வகணேசன் மாரிஸ்வரி அவர்கள் குடும்பத்தார் சார்பாக அன்னதானம் வழங்குகிறார்கள் வாழ்க வளமுடன்?????

மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் சேவகன்
பார்த்திபன்

விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜைகள் மற்றும் விநாயகருக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி சிறப்பாக கொண்டாடுவதற்கு பொருளுதவி செய்து கொடுத்த MKPஐயா அவர்களின் பேரன் உயர் திரு மோகன் தாஸ் ரேகாதேவி அவர்கள் குடும்பம்

 

Mohan Dass & Reka Family
Mohan Dass & Reka Family

 

விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜைகள் மற்றும் விநாயகருக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி சிறப்பாக கொண்டாடுவதற்கு பொருளுதவி செய்து கொடுத்த MKPஐயா அவர்களின் பேரன் உயர் திரு மோகன் தாஸ் ரேகாதேவி அவர்கள் குடும்பம் பல செல்வம் நல்ல உடல் நலத்தோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் நன்றி வாழ்க வளமுடன்???????

மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் சேவகன்
பார்த்திபன்

 

இரவு அன்னதானம் MKPஐயா அவர்களின் பேரன் வினோத் குமார் சுபத்ரா அவர்கள்

Vinoth & Subathra Family
Vinoth & Subathra Family

 

எங்கள் மேல் மருங்கூர் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடுவதற்கும் அதனை தொடர்ந்து இரவு கிராமத்தில் உள்ள மக்களுக்கும் பக்தர்களுக்கும் எங்கள் கிராமத்தில் கோவிலை கட்டிக் கொடுத்த MKPஐயா அவர்களின் பேரன் உயர் திரு வினோத் குமார் சுபத்ரா அவர்கள் குடும்பத்தார் சார்பாக வழங்குகிறார்கள் அவர்கள் குடும்பத்தார் அனைத்து செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ செல்வ விநாயகரை வணங்கி வேணடிக் கொள்கிறோம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ????

விநாயகர் சதுர்த்தி நாளில் இரவு அறுசுவை அன்னதானம் வழங்க பெரிய மனதுடன் முன் வந்த தம்பி வினோத் குமார் சுபத்ரா அவர்கள் தங்கள் தொழில் வளம் சிறந்து பல செல்வங்களையும் பெற்று வாழ செல்வ விநாயகர் அருள் புரிய வேண்டுகிறோம்?????

மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் சேவகன்
பார்த்திபன்

 

 

 

 

 

மேல மருங்கூர் கடைக்கோடி கிரமத்தின், ஶ்ரீசெல்வ விநாயகர் இரண்டு ஆண்டுகளின் அபரித பக்தியின் வளர்ச்சியும், கிராம மன மகிழ்ச்சியும், விநாயகர் சக்தியும் அருளும் அதிகம் உணர முடிகிறது. பலன் அடைந்தவர்கள பட்டியலும் அதிகம் காணப்படுகிறது. மேல மருங்கூர் ஶ்ரீசெல்வ விநாயகர் அருளும் புகழும் ஓங்கட்டும். 10/9/2021 ஆண்டு மேல மருங்கூர் ஶ்ரீசெல்வ விநாயகர் கோவில் கட்டி முதல் விநாயகர் சதுர்த்தி விழாவாக, கொண்டாடம் சிறப்பாக அறக்கட்டளை நிறுவாகம் நடத்த எங்களுடைய மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும். வாழ்க மக்கள் வாழ்க வையகம் வாழ்க வாழ்கவே!!!.

மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கௌரவ தலைவர்
பா. சிவஞானம்

மேல மருங்கூர் ஶ்ரீசெல்வ விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். மேன் மேலும் ஆண்டாண்டு தொடர்ந்து தொண்டு தொட்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற அந்த மேல மருங்கூர் மூலக்கடவுள் ஶ்ரீசெல்வ விநாயகரிடம் எனது கோரிக்கையை வைக்கின்றேன். வாழ்க வளமுடன் வளர்க சிறப்புடன்.

மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கௌரவ தலைவர்
பா. சிவஞானம்

 

 

செல்வ விநாயகர் அருளோடு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணன் செல்வகணேசன் (கோவைBro) வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர்

கமிட்டி-செயலாளர்

திரு-நிவாஷ்

 

மேல மருங்கூர் ஶ்ரீசெல்வ விநாயகர் அறக்கட்டளை தலைவர் முதல் தொண்டர்கள் வரை அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது வணக்கமும், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களும் உருத்தாகட்டும். எனது மனதில் வெகு நாட்களாக ஒரு ஆதங்கம்! என்ன வென்றால் வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிபார் என்று பெறியவர்கள் சொன்னார்கள், அதே போன்று தான் கோவிலை கட்டிப்பார் மக்களுக்கு தொண்டு செய்து பார்னு சொன்னாங்க?!. என் தகப்பனாரும் அடிக்கடி ஒன்னு சொல்வார் வெரும் கையில் முலம் போடாதே!!! ஆதலால் நாம் ஊர் கூடி அறக்கட்டளை மூலமாக ஶ்ரீசெல்வ விநாகர் கோவிலை மேல மருங்கூர் ஊர் கண்மாய் மேட்டில் நிலை நாட்டியுள்ளோம்!!
அதே போன்று திறன்பட செயல் பட எனது சார்பாக வருடத்தில் ஏப்ரல் மாதம் தின பூஜைக்கு உண்டான தொகையும், அடுத்து வருங்கால நிரந்தர பூஜைக்கு சேமிப்பு நிதியாக, பெரும் வைப்பு தொகை இருப்பாக சேர்வதர்க்கு நான் என் குடும்ப சார்பாக மாதா மதம் ரூபாய் 500.00 விநாயகர் சதுர்த்தி முதல் அறக்கட்டளை வங்கி கணக்கில் செலுத்துகிறேன். அதே போன்று தொண்டர்கள் அவர் அவர் உதவியை செய்வார்கள் என்று எதிர் பார்க்கிறேன். 30லட்சம் சேரும் வரை அதனை ஶ்ரீசெல்வ விநாயகருக்காக செய்து காட்டுவோம். இது விநாகர் பிறந்த நாள் பரிசாக துவங்கட்டும். வாழ்க வளமுடன் வளர்க சிறப்புடன். நன்றி வணக்கம்.

மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர்

கௌரவ தலைவர்

P. சிவஞானம் அவர்கள்

 

இனிய பிறந்தநாள் கானும் கோவை கனேசன் (கோவை BRO) எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வளர்க சீரும் சிறப்புடன்

பெளர்ணமி இயற்கை வெளிச்சமா! விளக்கின் வெளிச்சமா! மாலை நேரத்தின் இனிமை தோற்றமா! கண்ணை பறிக்கும் அழகு தோற்றம்! நிவாஸ்க்கு வாழ்த்துக்கள்.

மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர்

கௌரவ தலைவர்

P. சிவஞானம் அவர்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *