30&31, July 2022 SSVT-மீட்டிங்
மேலமருங்கூர் செல்வ விநாயகர் ஆலயத்தின் கௌரவ தலைவர் உயர் திரு பாண்டுரங்கன் அய்யா அவர்கள் 30.7.2022,31.7.2022 அன்று கிராமத்தில் நேரடியாக தொடர்பு கொண்டு மேலும் கோவிலை நல்ல முறையில் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அவரின் உயர்ந்த ஆலோசனைகள் கீழ் கண்டவாறு நடைமுறை படுத்த முடிவு எடுக்கப் பட்டது.
30&31 July 2022 SSVT-மீட்டிங் மற்றும் என்ன என்ன தீர்மானங்கள் எடுக்கப்பட்டது
********************************************************************************************
விட்டுப்போன பிற்சேர்க்கைகள்:-
1)கமிட்டீ ஒரு தரத்தை நிர்ணயம் செய்தல்:
a )கோவிலை மட்டும் வைத்து இணைந்த உறுப்பினர்கள், மற்றவர் பர்சனல் விஷயத்தில் தலையிட்டாலும் புறக்கணிப்பது.
(உதாரணம், எனக்கு விருந்து கொடுத்த வீட்டில், மகளிர் சுடிதார், சாதா சேலை காட்டியது தவறு. குடும்ப தலைவர் கைலி காட்டியது தவறு. வீட்டில் எனக்கு பிடிக்காத வர்ணம் அடித்தது நல்லாவே இல்லை..)
b ) ஸ்ரீ செல்வா விநாயகருக்கும், கோவிலுக்கும் சேவை செய்ய இணைந்துள்ளோம் என்ற அடிப்படையான நின்டுவு இருக்க வேண்டும்.
(உதாரணம் : மற்றவர் திருப்தி சம்பாதிக்க தேவை இல்லை. அவர், இவர் அப்படி இப்படி நினைப்பது, நமது நிர்வாகத்தை பாதிக்க அனுமதிக்கக்கூடாது.)
c ) யார் ஆக்ரமிக்கலாம்?
யாரும் தனது கருத்துக்களை வலுக்கட்டாயமாக திணித்து கோவிலை ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது.
(உதாரணம்: அண்ணன் தாமோதரன் அவருக்கு தெரிந்த நிர்வாகங்களை பகிர்ந்தார். அவரின் கருத்தை திணித்தால், கமிட்டீ விரும்பாமல் ஏற்றுக்கொண்டால் அது ஆரோக்கியமற்ற நிர்வாகமாகி விடும். வயதை மட்டும் காரணம் காட்டி எதுவும் திணிக்கப்பட்ட கூடாது)
2) வெளி வருமானம் ஈர்க்க திட்டம் இட்டு, வரும் மே திருவிழாக்குள் அமல் படுத்துதல்:
உற்சவ மூர்த்தி வாங்க தகுந்த செயல்களை திட்டம் இடுதல்
இந்த ஒரு வருடம் சங்காபிஷேக யாகம் பற்றி பொது மக்களிடம் பிரபல படுத்த தேவையான வேலைகள் திட்டம் இடுதல்
சங்காபிஷேக துக்கு, பூஜாரியிடம் சங்குகள், குடங்கள் அடிப்படையாக பக்தர்களுக்கு இலவசமாக, வாடகை இல்லாமல் கொடுத்து பூஜை செய்ய தட்சணை நிர்ணயித்தல்.(உதாரணம் ரூபாய் 1000)(கோவிலுக்கு கட்டணம் முக்கியம்)
மற்ற சங்காபிஷேக யாக சாமான்கள் முதல் மாலை வரை, ஒரு பட்டியல் தயார் செய்தல்.(பிள்ளையாருக்கு, பக்தர் ரூபாய் 5000க்கு மாலை வங்களினாலும், வெறும் அருகம் புள் போட்டாலும் பக்தர்களின் சர்வ சுதந்திரம். யாக பொருட்கள் 1 கிலோ, 1 கிலோ வாங்கினாலும், வெறும் 10 கிராம் வாங்கினாலும் பக்தர்கள் இஷ்டம்)
சுருங்க சொன்னால், 1 அல்லது 2 வருடம் சங்காபிஷேகத்தை சுற்றி இருக்கும் ஊர்களில் சந்தை படுத்துவோம். அதில் வெளி கிராம பக்தர்களின் விருப்பத்தை உருவாக்குவோம். இதன் மூலம் கோவிலுக்கு வருமானத்தை உருவாக்குவோம். முதலில் ஒரு விஷயத்தில் FOCUS செய்வோம்.
****************************************************************************
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 01-
அன்னபூரணி ஓட்டல் உரிமையாளர் நிலுவை தொகை 20000 கொடுக்க வேண்டும்
செயலாக்கம் செய்த தேதி: 1 8 2022
2.4.2021 அன்று கிராமத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக அன்னதானம் நிகழ்வில் பரமக்குடி அன்னபூரணி ஓட்டல் உரிமையாளர் உயர் திரு வெங்கடேஷ் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை 20000 கொடுக்க வேண்டும் என்று கமிட்டி முடிவு செய்து 1.8.22 அன்று கௌரவ தலைவர் உயர் திரு பாண்டுரங்கன் அய்யா அவர்களும் செயலாளர் நிவாஸ் அவர்களும் நேரடியாக சென்று பணம் கொடுத்து விட்டார்கள்
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 02
லிஸ்ட் ஆப் THINKS
லிஸ்ட் ஆப் THINKS ஒவ்வொரு பூஜைகள் செய்வதற்கு எடுத்து காட்டாக 1.2.3.4.5 அதற்கு மேல் உள்ள அபிஷேகம் செய்ய எவ்வளவு தொகை என்பதை நிர்ணயம் செய்தல் ( பிறந்தநாள், திருமண நாள்,ஹோம நிகழ்வு உட்பட)
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 03-
பூசாரி போன்
கோவில் முன்னால் திடீரென வரும் நபர்கள் தொடர்பு கொள்ள செயலாளர், பூசாரி போன் நம்பரை முகப்பில் பாக்ஸில் எழுதி வைத்தல்.
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 04-
ரூபாய் 200 கட்டணம் நிர்ணயம்
பக்தர்கள் மற்றும் கோவிலில் விழா நடத்துபவர்கள் வெறுமனே நடத்தாமல் கோவில் கட்டணமாக ஏழை மக்களும் பயன் பெறும் சூழலை கருத்தில் கொண்டு ரூபாய் 200 கட்டணம் நிர்ணயம் செய்ய பட்டுள்ளது.அதற்கு மேல் விருப்ப பட்டு கொடுப்பவர் கொடுக்கலாம்.
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 05-
நேர் மறை எண்ணங்களோடு செல்ல
கோவிலுக்கு வரும் பக்தர்கள் positive energy நேர் மறை எண்ணங்களோடு செல்ல அனைவரும் பங்கு எடுத்து கொள்ள வேண்டும்.எதிர் மறை எண்ணங்களோடு செல்ல கூடாது.தவிர்த்தல் நலம்.
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 06-
எதிர் வரும் ஆண்டு விழா நாள் 12.05.2023.
வருடாந்திர விழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது.தற்போது அனைத்து மக்களுக்கும் குறிப்பாக மாணவர்கள் தேர்வு அரசு பணியில் இருப்பவர்கள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிக அளவில் மக்கள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் நிரந்தர விடுமுறை மாதமான மே மாதத்தில் வரும் இரண்டாம் வெள்ளி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
எதிர் வரும் ஆண்டு விழா நாள் 12.05.2023.
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 07-
குடிவரி முகநூலில் வெளியீடு செய்வது.
குடிவரி(5000) ரூபாய் கொடுத்து உள்ளவர்கள் 2022 ஆண்டின் கணக்கெடுப்பின்படி முகநூலில் வெளியீடு செய்வது.
செயலாக்கம் செய்த தேதி: 4 8 2022
4 8 2022ல் MKP பாண்டுரெங்கன் பேஸ்புக்கில் பிரசுரம் செய்து முடிந்ததார்
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 08-
அன்றைய செலவுகளை கமிட்டி ஏற்றுக் கொள்வது.
குடிவரி கொடுத்தவர்கள் குடும்பத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிகள் திருமண நாள் பிறந்தநாள் ( பேரன் பேத்தி அப்பா அம்மா) உள்பட சிறப்பு நிகழ்வாக ஒருநாள் பூஜை செய்து பிரசாதம் வழங்கி வாழ்த்துக்கள் கூறி அன்றைய செலவுகளை கமிட்டி ஏற்றுக் கொள்வது.
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 09-
தொகை என்று நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டது
அய்யர் மற்றும் பூசாரிக்கு நாம் அதிகம் கொடுத்து விட்டோம் அல்லது அவர்கள் அதிகம் வாங்கி விட்டார்கள் என்ற எண்ணம் ஏற்படாதவாறு ஒவ்வொரு பூஜைகள் செய்வதற்கு எவ்வளவு தொகை என்று நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 10-
போட்டோ எடுத்து அனுப்புவது.
Facebook WhatsApp Instagram website போன்ற தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகள் பயன் படுத்தி வார்த்தைகள் படிப்படியாக எழுதுவதற்கு மருங்கூர் கிராமத்தில் இருக்கும் வனிதா என்ற பெண்ணை நியமனம் செய்வது. பௌர்ணமி.சங்கடஹரசதுர்த்தி இன்னும் பல நிகழ்வுகளை போட்டோ எடுத்து அனுப்புவது.
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 11-
ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு
குடிவரி கொடுத்தவர்கள் குடும்பத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிகள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் ஏற்படும் செலவை கமிட்டி ஏற்றுக் கொள்வது.மற்றவை விரும்பினால் அவர்கள் சொந்தமாக செய்து கொள்ள ஏற்பாடு செய்து தரப்படும்.
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 12-
T shirt எடுத்து
கோவில் பணியில் தொண்டு செய்ய விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானித்தல்.
அதன் அடிப்படையில் ஆண்கள் பிரிவில் ஒரு கலரும் பெண்கள் பிரிவில் ஒரு கலரும் T shirt எடுத்து கொடுத்தல்.( இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர்அணி) இதன் முக்கிய நோக்கம் கோவிலுக்கு சேவைகள் செய்தல்.
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 13-
யூடீப் சமூக
யூடீப் சமூக வலையமைப்பு பயன் படுத்தி நன்றாக விளம்பர படுத்தும் நபரை தேர்வு செய்து கோவிலின் தொடக்கம் முதல் நேர்த்திக்கடன் வேண்டுதல் செய்து நிறைவேறிய சம்பவங்கள் வெளி உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் அதற்கான முயற்சி செய்தல்.
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 14-
ஐம்பொன்னால் ஆன விநாயகர் சிலையை
திருவிழா விநாயகர் சதுர்த்தி வருடவிழா நேரங்களில் வீதி உலா ( உற்சவமூர்த்தி) வருவதற்கு ஐம்பொன்னால் ஆன விநாயகர் சிலையை சுவாமி மலை முருகன் கோவில் அமைந்துள்ள ஊரில் வாங்குவது மற்றும் ஜனவரி மாதத்தில் தயாராக இருக்கும் அளவுக்கு முயற்சிகள் மேற்கொள்வது.
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 15-
உற்சவமூர்த்தி
திருவிழா விநாயகர் சதுர்த்தி வருடவிழா நேரங்களில் வீதி உலா
( உற்சவமூர்த்தி) வருவதற்கு ஐம்பொன்னால் ஆன விநாயகர் சிலையை சுவாமி மலை முருகன் கோவில் அமைந்துள்ள ஊரில் வாங்குவது மற்றும் ஜனவரி மாதத்தில் தயாராக இருக்கும் அளவுக்கு முயற்சிகள் மேற்கொள்வது.
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 16-
நிலம் வாங்குங்கள்
தான் பிறந்த ஊருக்கும் தன் அப்பா இந்த ஊர் ஏழை எளிய மக்கள் வழிபட கோவில் அமைத்து கொடுத்ததின் பயனாக தாங்கள் மூதையார்கள் வாழ்ந்த மருங்கூர் மண்ணில் தாங்கள் பாதம் பட்டதை எண்ணிமருங்கூர் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.மேலும் மக்கள் அனைவரும் அன்புடன் ஒரு நிலம் வாங்குங்கள் என்று கேட்டுகொண்டதின் பேரில் நிலம் வாங்க இசைவு தெரிவித்தார்கள்.நிலம் வாங்கி அன்னதானம் வழங்கவும் பக்தர்கள் பயன் படுத்தும் வகையில் கட்டடம் கட்டவும் ஒரு திட்டம் காலப் போக்கில் உள்ளது.இதை நெஞ்சார நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.
செயலாக்கம் செய்த தேதி:
தீர்மானம் செய்யப்பட்ட தலைப்பு:
எண் 16-
உயர் திரு தாமோதரன் அய்யா அவர்களுக்கும் நன்றிகள்
இந்த சிறப்பு மிக்க ஆலோசனைகள் வழங்க தன் சொந்த பணத்தை செலவு செய்து எந்த விதமான பிரதிபலனை எதிர்பார்க்காமல் உதவி செய்தமைக்குஉயர்திரு பாண்டுரங்கன் அய்யா அவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள்.மேலும் நல்ல ஆலோசனைகள் வழங்க மதுரையில் இருந்து வந்த உயர் திரு தாமோதரன் அய்யா அவர்களுக்கும் நன்றிகள் பல சிறப்பு வாய்ந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், மகளிர், உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள் இன்பமே பெருக விநாயகர் அருள் புரிக நன்றி வணக்கம் ?????
செயலாக்கம் செய்த தேதி: