It is about Manimekala’s Gratitude to Sree Selva Vinayagar Temple Active Members, She sent me and I am publishing it.
MKP Pandorangan
வணக்கம்,
நான் இரண்டு நாட்கள் கிராமத்தில் இருந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டேன். கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடப்பதற்கு காரணமாக இருந்த சில நல்ல உள்ளங்களை நன்றி சொல்ல விரும்புகிறேன்.
1 சண்முகநாதன் அய்யா
கோவிலுக்கு செங்கல் நடவதிலிருந்து , விநாயகர் சிலையை இறுதியில் அவர் இருப்பிடத்திற்கு அமரவைத்து வைத்து சரி பார்க்கும் வரை எடுத்த காரியத்தை சாஸ்திர முறையில் , சொன்ன நேரத்திற்குள் வெற்றிகரமா முடித்து , எங்களுக்கு சிறந்த ஆலயத்தை பெற உதவியர்களில் நீங்களும் ஒரு முக்கிய பங்கு. நன்றி ஐயா.
- ஹரிஹாரா கனபாடிகள்
உங்களது மந்திரங்கள் , விநாயகரை மெருகேற்றியதுடன் இல்லாமல் , எங்களது ஆத்மாவை உயிர்பித்தது . நீங்கள் எல்லா இறைவனையும் வரவேற்று, எப்படி கருடன் வந்து , கும்பத்தில் அபிஷேகம் செய்யும் போது , காட்சி அளித்து , விழாவை அரகேற்றினாரோ , அதே போல, எங்கள் உள்ளத்தில் இருக்கும் கழிவுகளை அகற்றி , எங்களுக்குள் ஆன்மீக விளக்குகளை அரங்கேற்றினீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.இப்படி ஒரு மந்திர சாஸ்திரங்களில் நான் இது வரை கலந்ததில்லை. அற்புதமாக பூஜை செய்து , எங்களுக்குள் தெய்வீக உணர்வுகளை ஏற்றியதற்கு கோடான கோடி நன்றிகள்.
- தனபால் ஐயா
கிராமத்தில் மூத்த குடிமகனாக , எங்க வயதை உங்கள் அனுபவமாக வைத்து, கோவிலுக்கு தேவையான அணைத்து முடிவுகளிலும், அறக்கட்டளை குழுவிற்கு சிறந்த வழிகாட்டியாக நின்று எங்களுக்கு உறுதுணையாக நின்றீர். அந்த காலத்திலிருந்தே கோவிலுக்கு சிறு வெளிச்சம் செய்து கொடுக்க , கோவிலுக்கு ஈபி பில் கட்டி, சிறு விளக்கு தருவதற்கு மிகவும் உதவிய இருந்தீர்கள். மிக்க நன்றி.உங்கள் மகன் மருமகள், சம்மந்தி வீட்டார்கள் அனைவரும் எங்களை அன்போடு கவனித்ததிற்கு நன்றி ஐயா
- பார்த்திபன் அண்ணா
அனைவரையும் ஒன்று திரட்டி , அனைவரையும் திருப்தி பண்ணுவது என்பது இயலாத ஒன்று. ஆனால் , தனக்கு கொடுத்த பொறுப்பை, மிக சிறப்பாக செய்து ,எல்லாருக்கும் நன்றி சொல்லிகொண்டே இருந்து , பாராட்டு படைத்த திரு, பார்த்திபன் அண்ணா அவர்கள் அனைவரின் உள்ளத்திலும் மாபெரும் இடத்தை பிடித்தார் என்பதில் சந்தேகம் இல்லை. முகம் தெரியாதவர் என்றாலும், பிறரை பாராட்டி பேசுவதற்கு ஒரு மனம் வேண்டும். 1 ரூபாய் கொடுத்தாலும், அவர்களை நீங்க வாழ்த்த மறந்ததில்லை. நன்றி பார்த்திபன் அண்ணா. நீங்களும் உங்களை சேர்ந்தவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் .
- நிவாஸ் தம்பி
நான் இருந்த , இந்த 2 நாட்களில் , எனது இமைகள் உங்களை விட்டு நகரவில்லை என்றே நான் சொல்ல வேண்டும். இந்த வயதில், இப்படி ஒரு பொறுப்பா? இப்படி ஒரு பக்தி மையமா ? வார்த்தைகள் இல்லை உங்களுக்கு நன்றி சொல்லுவதற்கு. உங்களது நண்பர் கூட்டத்தை திரட்டி, கோவிலை சுற்றி, உங்கள் கழுகு பார்வையாலே செட்டியார் குடும்பத்தையும் , கோவிலுக்கு வந்த பக்தர்களையும் பாதுகாதிர். தொடர்ந்து லைவ் வீடியோ எடுக்கிறேன், போட்டோ எடுக்கிறேன் , பொறுப்பாளர் பதவி செய்கிறேன் , எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடு என்று உங்கள் கைகள் உங்களை கேட்கவில்லையோ? ஒரு வாரத்திற்கு மேல தூங்கவில்லை, எல்லா வேலையையும் பார்த்து நான் சிவந்தே போய்விட்டேன், எனக்கு ஒய்வு கொடு என்று உங்கள் கண்களும் கேட்கவில்லையா? நாங்கள் அங்கிருந்து விடைபெறும்போது உங்களிடம் சொல்லிவிட்டு வரலாம் என்று நீங்கள் இருக்கும் அறையில் வந்து பார்க்கும்போது , உங்களை அறியாமல் மைக் வைத்து கொண்டு, போன் வைத்து கொண்டே உறங்கி கொண்டிருந்திர்கள். எழுப்பினதற்கு என்னை மன்னியுங்கள். உங்கள் வயதில் யாருக்கும் வாராத பொறுப்பு உங்களிடம் உண்டு. நன்றி , மிக்க நன்றி .
- பாசில் / நிருபன்
இருக்கும் இடத்தில் பொறுப்பு மட்டும் பத்தாது. நகைச்சுவை உடன் உள்ள நிகழ்வுகளும் தேவை என்பதற்கு சிறந்த எடுத்து காட்டு நீங்கள். வரலாறு முக்கியம் அய்யா என்று நீங்கள் கூறி கொண்டே எடுத்த புகைப்படங்கள் எல்லாம், அந்த இனிமையான நிகழ்வுகளை எங்களிடம் மீண்டும் மீண்டும் நினைவுட்டும் . அனைவரிடமும் சகதோர பாசம் காட்டி நிகழ்ச்சியை மெருகுடிய உங்கள் இனிய உள்ளங்களுக்கு நன்றி.
- மலர்க்கொடி அம்மா
சிறந்த மகளிர் என்று உங்களுக்கு விருது கொடுத்தது மட்டும் பத்தாது உங்களுடைய சேவைக்கு . யாரையும் எதிலும் எதிர்பார்க்காமல் கோலம் போடுவதில் இருந்து [விழிகள் உறங்காமல் மெட்ராஸ் ஐ வந்தது போல காட்சி அளித்த உங்கள் கண்கள்களை வைத்துக்கொண்டு] சுத்தம் செய்வது வரைக்கும் எல்லா வற்றையும் தன்னுடைய தலையில் மேல் போட்டு, பார்த்த உங்களுக்கு , நாங்கள் தலை வணங்குகிறோம் தாயே.
- பார்த்திபன் குடும்பத்தினர்
பார்த்திபன் அவர்களின் அம்மா, மனைவி , அவர் உடன்பிறந்தோர் , அவரின் மனைவி – இவர்களது வீட்டு உபசரிப்பு இல்லை என்றால், உண்மையிலேயே எங்களால் எங்கள் பிள்ளைகளை வைத்து கொண்டு கோவில் விழாவில் நிம்மதியாக கலந்திருக்க முடியாது. அன்னாரது அம்மா , சொல்வதற்கு வார்த்தை இல்லை. அவர்கள் வீட்டு கழிப்பறையை எல்லாரும் உபயோகித்து துர்நாற்றத்துடன் இருந்தது. பட்டு சேலை கட்டிக்கொண்டு , அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தார். என்னுடைய வியப்புக்கு ஆச்சரியம் இல்லை. அன்னாரது மனைவியோ, வருபவர்களுக்கு மாற்று துணி தருவது வரை சென்றார். அன்னாரது உடன்பிறந்தோர் மற்றும் அவரது மனைவி , இவர்களுக்கு சலித்தவர்கள் அல்ல, அவர்களின் உபசரிப்பில். உடன்பிறந்தோர் , கிராம வாழ்க்கையில் எப்படி இருப்பார்கள் என்பதை எங்களுக்கு உங்கள் குடும்பம் சொல்லி கொடுத்தது ஐயா . உங்களுது நல்ல உள்ளத்திற்கு தான் இறைவன் இப்படி ஒரு குடும்பம் கொடுத்தாரோ ?
- கோவை கணேஷ் குடும்பம்
நான் சம்பித்த பிரியமான மாமா. என்றும் உரிமையுடன், எல்லா வேலைகளிலும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய தவறவில்லை. நீங்கள் மட்டும் அல்ல, அத்தையும், இரண்டு செல்ல பிள்ளைகளும் என்னுடன் இருக்கும் நொடிகள், இனிமையானதாவை. எங்களை அன்போடும் உரிமையோடும் கவனித்ததற்கு நன்றி.
- அறக்கட்டளை உறுப்பினர்கள்
அணைத்து அறக்கட்டளை நிர்வாக குழு நபர்களுமே ஒருங்கிணைப்புடன் செயல் பட்டதால் தான் , எந்த குழப்பமும் இன்றி இனிதுடன் நிறை பெற்றது. “டீம் ஒர்க் நெவெர் பெயில்ஸ்” என்பதை நிரூபித்து காண்பித்தார்கள். எண்ணம் போல வாழ்வு என்பதை நிரூபிக்கும் வண்ணம், தங்களுடைய ஊருக்கு ஒரு கோவில் உருவாக்குவேன் என்று நினைத்து , அணைத்து தடங்களையம் உடைத்து வெற்றி பெற்று உள்ளீர் . உங்கள் மனது போல, எல்லாமே இனிதாய் அமைந்தது. கம்பீரம்பாக அமைந்தார் விநாயகர். இனி எல்லாம் சுகமே.
இவர்கள் கைகள் ஓங்குவதற்கு தூண்டுகோலாக இருந்த MKP யின் நான்கு பிள்ளைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அதிலும் குறிப்பாக பாண்டுரங்கன் அவர்கள் மற்றும் சிவஞானம் அவர்களும் வழி நடத்தி சென்ற பாதைகள் சில :
கூகிள் மேப் இல்லாத ஒரு கிராமத்தில் , மேப் கொண்டு வந்து, அந்த ஊருக்கு வெப்சைட் உருவாக்கி , அனைவரையும் ஒன்று திரட்டி கிராம மக்கள் நடுவிலே தலைவர்கள் பொறுப்பாளர்களை உருவாக்கி, அன்பு கட்டளை விட வேண்டிய இடத்தில் அன்பாய் கூறி , அதட்ட வேண்டிய இடத்தில் அடக்கி , இலக்கை மட்டுமே கூறி வைத்து, விழாவை லைவ் செஷன் ஆக நடத்தி, குக்க்ராமத்தில் நடந்த கும்பாபிஷேக விழாவை , உலகமுழுவதும் பார்க்கும் வண்ணம், மலேஷியா வில் உக்கார்ந்து , இங்கு ரிமோட் கண்ட்ரோல் செய்து பார்த்த பாண்டுரெங்கன் மாமா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். எடுத்த காரியத்தை , பல இடையூறுகள் வந்தாலும், இறுதி வரை எடுத்து சென்று வெற்றி பெற செய்தீர். நன்றி.
பல பிரச்சனைகளை முன்னரே யோசித்து கௌரவ திட்டம் ஒன்று உருவாக்கி , அனைவரையும் பங்கேற்க செய்து, நினைவலைகளை பகிர்ந்து , சுறுசுறுப்புடன் ,பல திட்டங்களை கொண்டு வந்து, கிராமத்தில் குழப்பங்கங்கள் தீர வழி செய்த சிவஞானம் மாமா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
பெண் வாரிசுகளும் சலித்தவர்கள் அல்ல. தங்களால் இயன்ற வரை வசூல் செய்து, பிறந்த வீட்டிற்கும் ,பிறந்த கிராமத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
எனக்கு அங்கு இருந்து , கும்பாபிஷேக விழாவை கண்டு நெகிழ்ச்சி அடைய வாய்ப்பு கொடுத்த அனைவர்க்கும் நன்றி
நன்றி வணக்கம்,
உ . மணிமேகலை பி.டெக்(ஐடீ),
சென்னை.