History About Sree Selva Vinayagar Temple – இதயம் பேசுகிறது

Sree Selva Vinayagar Temple in 2019
Sree Selva Vinayagar Temple in 2019

இதயம் பேசுகிறது.

1986ல் மேல மருங்கூர் ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் அஸ்திவாரம், கட்டிடம் கட்டப்பட்டுள்ள ஓர் அழகு ஆலயமாக அமைய பெற்றுள்ளது. மு.கி.பாலுச்சாமி செட்டியார் அவர்கள்,தனிநபர் முயற்சியாக விநயாகர் ஆலயம் அமைய பெற்றது. அன்று ஒரு கை ஓசையாக , எடுத்த காரண காரியத்தை சிரத்தையாக செய்து முடித்தார். அதன் அன்றய புகைப்படம் ஆதாரமாக உள்ளதை உங்கள் கண் முன் நிறுத்தி உள்ளேன். பல தடங்களை கடந்து அதிக இடுபாட்டுடன்,நினைத்தது நிரைவு அடைந்தது முன்னிட்டும்,யாம் பெற்ற இன்பம் வையகம் பெற வேண்டும் எண்ணத்தோடு,ஆண்மீக சிந்தனையோடு ,தனி ஒரு மனிதனாக அந்த கால கட்டத்தில் ஶ்ரீ செல்வ விநாயகர் சக்தியை, அருளை புழம் படைத்துள்ளார். நம் மனதில் நினைவலையாய் சரி்த்திரமாக இருக்கிறது.

இதயம் பேசுகிறது.
விகாரி வருடம் ஆவணி 27ஆம் தேதி, 13.9.2019 வெள்ளிக்கிழமை வரை 36 ஆண்டுகள் கடந்து பாலஸ்தாபன கும்பாபிஷேகம் கண்டது. அதற்க்கு மிக முக்கிய காரணம் பக்தியோடு முன் வந்தவர்களை, சாதி, அடக்கு முரை , சர்வதிகாரம், துஸ்பிரியோகம் அதி முக்கியமாக பயத்தை உண்டுபண்ணுதல் இவை அனைத்தும் தங்கு தடையாக இருந்தது. மேலே கானும் படம் மிக மிக மோசமான இடிந்து விழும் கட்டிட நிலையை கண்டு வருந்தாத மனம் உண்டா !? சதி நாசம் செய்தவர்களை தவிர.சதி நாசத்தால், விநாயகர் பஞ்சகாலத்தை காட்டிலும் படு மோசமாக கை விட பட்ட நிலை. அரசன் அன்று கொல்வான் ,தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக ஶ்ரீ செல்வ விநாயகர் தன் தேவைகளை தன் முக்கிய பக்தர்களை வைத்து தன் தேவையை நோக்கி செயலில் அடக்கு முறையை அடக்கி தன்னை தானே தயார் படுத்தி வருகிறார் ஶ்ரீ செல்வ விநாயகர், அருள் பாலிக்க.

Mr. M. K. Palusamy Chettiar with with Mr. Dhanasegaran at his 20's
Mr. M. K. Palusamy Chettiar with with Mr. Dhanasegaran at his 20's
M. Athimoolam Chettiar with Chellamal & Her Grand Children 1986
M. Athimoolam Chettiar with Chellamal & Her Grand Children 1986

இதயம் பேசுகிறது.
2/4/2021 மேலமருங்கூர் கிராம மக்கள் மகிழ்சி வெள்ளத்தில் மிதந்து வருகிறார்கள். கடைக்கோடி கிராமமாக இருந்து. இன்று முப்பது குடும்பம் வாழ்ந்து வரும் மேலமருங்கூர் மக்களை உலகத்தில் அறிய பல நாடுகள் நாடுகிறது. அதற்க்கு முக்கிய காரணம் 36ஆண்டுக்கு பிறகு ஆத்மார்த்தமாக இனைந்த இனைப்பு , நெஞ்சமர நீக்கா எண்ணமாக அமர்ந்திருக்கும் நமது ஶ்ரீ செல்வ விநாயகர் மேலமருங்கூர். அடையாலம் இல்லாத பஞ்சத்தின் உச்சமாக இருந்த ஶ்ரீ செல்வ விநாயகர்! இன்று ஊரின் நாயகனாக, நிலத்தின் உருமையாளராக, புதிய அகலம் கொண்ட ஆலயமாக, அரசாங்க உரிமம் பெற்ற ஆதார் அட்டையுடன் , நூறாண்டுகள் பழமை வாய்ந்த சக்திமிக்க அற்புத விநாயகராக அருள் பாலித்து வருகிறார்.

Sree Selva Vinayagar Temple in 2 April 2021-After Kumbabishek
Sree Selva Vinayagar Temple in 2 April 2021-After Kumbabishek
Sree Selva Vinayagar Temple in 2 April 2021-After Kumbabishek
Sree Selva Vinayagar Temple in 2 April 2021-After Kumbabishek

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *