Principle Of Management 2-By MKP Pando

Principle Of Management 2-By MKP Pando. I am writing about the discipline and standard to enable us to manage our Sree Selva Vinayagar Temple effectively. Because temple members understand Tamil well, I write in the Tamil language.

யார் முக்கியம்

அதிக வசூல் செய்தவர், அதிக சேவை செய்தவர்கள், 20, 30 ஆண்டுகளாக கரண்ட் பில் கட்டியவர் இதில் யார் முக்கியம்?

மேற்கண்ட யாருக்காகவும் நாம் ஒருங்கிணையவில்லை. ஸ்ரீ செல்வா விநாயகர் ஆலயத்திற்காக மட்டுமே இணைந்தோம்.

பல பலன்கள் கிடைத்ததாக சொல்லும் பக்தர்களிடம் கேளுங்கள். வசூல் செய்தவரால், கரண்ட் பில் கட்டியவர்களானால், சேவை செய்தவர்களால் பலன் கிடைத்ததாக நம்புகிறார்களா? அல்லது ஸ்ரீ செல்வா விநாயகரால் பலன் கிடைத்ததாக நம்புகிறீர்களா?

யாருக்கு முன்னுரிமை, மரியாதை, ஒத்துழைப்பு?

விநாயகருக்கு சேவை செய்ய யார் முன்வருகின்றனர்? விநாயகருக்கு அடுத்ததாக அவர்களுக்கே மதிப்பும், மரியாதையும் ஒத்துழைப்பும் கொடுக்கப்பட வேண்டும்.

நாம் சேவை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பது இல்லை. நாம் கொடுக்கும் சம்பளம் வாங்கும் தரத்தில் உள்ளவர்கள் யாரும் இல்லை. அவர்கள் தானே முன்வந்து சேவை செய்கின்றனர்.

36 வருடங்கள் முன்பு தேங்காய் மாலை எதிர்பார்த்த மக்கள், சேவை எப்படி செய்வது என்றும், நிர்வாகம் எப்படி செய்வது என்றும் கடுத்தினியும் அல்லது கனவிலும் யோசிக்கவில்லை.

இனாமாக சேவை செய்பவர்களை பொது மக்கள், பக்தர்கள், வசூல் செய்தவர்கள், கரண்ட் பில் காட்டியவர், அனைவரும் சேவையும் நிர்வாகமும் செய்ய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

நாம் அனைவரும் சேவை செய்தல்

ஸ்ரீ செல்வ விநாயகர் இல்லை என்றால் யாரும் மேல மருங்கூர் வந்திருக்கவோ, வசூல் செய்யவோ, கோவில் கட்டியோ இருக்க மாட்டோம் .

ஆக நமது நிர்வாகம் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு எப்படி சேவை செய்வது, கோவிலை மேம்படுத்துவது எப்படி போன்ற விஷயங்களில் மட்டுமே நிர்வாகிகளுக்கு கவனம் இருக்க வேண்டும்.

அதை விடுத்து, எப்படி தனி மனிதர்களை திருப்தி படுத்துவது, சிறு சிறு தனி நபர் பிரச்னை களை தீர்ப்பது போன்ற கவனம் வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஊர் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது கமிட்டியின் வேலை இல்லை என்பதை தெளிவாக புரிந்தால் தான் நிர்வாகம் செய்ய இயலும்.

 

ஏன் கமிட்டீ அமைப்பு

கோவில் கட்ட பலவகையில் உதவியவர்கள் உண்டு. பொருள் ரீதியாக உதவியவர்கள் சிலர் பெயர் மட்டும் அதாவது சுமார் 60,70 பெயர் கல் வெட்டில் பார்க்கலாம்.

நிவாஷ், ஜெயப்ரகாஷ், பார்த்திபன், மலர்க்கொடி இன்னும் பலர் உழைப்பை கல் வெட்டில் இருக்காது.

முள் தலையணையில் படுத்தவர், பணம் வாங்காமல் கூட்டி பெருக்கியவர் பெயர் எல்லாம் கல் வெட்டில் இருக்காது.

மேற் கண்ட அத்தனை நபர்களும் நிர்வாக முடிவுகளில் நெருக்குதலும், அழுத்தமும், அதிருப்தியும் செலுத்தினால் நிர்வாகிகள், கமிட்டீ உருப்படியாக நிர்வாகம் செய்ய இயலாது.

நானே ஆயிரம் ஐடியா கொடுத்துள்ளேன். என் மனைவி ஆயிரம் ஐடியா கொடுத்துள்ளது. ஆராய்ந்து, சாஸ்திரம் அறிந்தவர் துணையுடன் இறுதி முடிவு கமிட்டீ தான் எடுக்க வேண்டும்.

நான் சொன்னேன் என்ற ஒரே காரணத்துக்காக கமிட்டீ முடிவு எடுத்தால் அது நிர்வாக கோளாறு என்று பொருள்.

இப்படிக்கு,

MKP. பாண்டுரெங்கன்
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கௌரவ தலைவர்
மலேஷியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *