It is about Principle Of Management 3- Pando- Sree Selva Vinayagar Temple effectively.
CUP PRINCIPLE
CUP PRINCIPLE
C = CONCENTRATION
U = UNDERSTANDING
P = PRACTICE
கோவில் நிர்வாக கமிட்டீ கப் என்ன?
கோவில் நிர்வாகம் என்றால் பல விஷயங்களை கொண்டது.
C = கான்செண்ட்ரஷன், அதாவது எதில் கமிட்டீ கவனம் வைக்க போகிறது?
செட்டியார் குடும்பங்களை, கோனார் குடும்பங்களை, தேவர் குடும்பங்களை திருப்தி செய்வதிலா? இதில் கவனம் இருந்தால், இரண்டு செட்டியார் குடும்பத்தையோ, கோனார்குடும்பத்தையோ, தேவர் குடும்பத்தையோ, திருப்தி செய்ய முடியாது.
பாலாலயத்தில், எனக்கு தனி ரூம் கொடுத்தது, மற்றவர்களுக்கு குறையாக தெரிந்து இருக்கலாம். மற்றவர்களுக்கு பெரிய ரூம் கொடுத்துவிட்டது எனக்கு மாபெரும் குறையாக தென்பட்டது.
அந்த ஓட்டலில் இருந்தது செட்டியார் குடும்பங்கள் தான்.
அல்லது எப்படி பூ செடி வளர்த்து நிர்வாக செலவை சிக்கனம் செய்வது? எப்படி கிராமத்தை தாண்டிய மக்களை கவர்ந்து, கோவில் வருமானத்தை உற்பத்தி செய்வது? இது போன்ற நிர்வாக சிந்தனையில் ஆழ்ந்து மூழ்க போகிறீர்களா?
U = UNDERSTANDING
U = UNDERSTANDING
புரிதல், அறிதல், புரிந்துகொள்ளுதல் என்று பொருள்
கமிட்டீ உறுப்பினர்கள் அனைவரும் சம்பளம் இன்றி கோவிலுக்கு சேவை புரிகிறீர்கள் என்று பொருள்.
உறுப்பினர்கள் அனைவரும் அவர் அவருக்கு அலுவல் உள்ளது. குடும்பம் உள்ளது. இருக்கும் மீத மிகக்குறுகிய நேரத்தை கோவிளுக்கு சேவகனாக, சேவகியாக செயல் பட ஒவ்வொரு உறுப்பினருக்கும் என்ன பொறுப்பு என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்வது அவசியம்.
ஒரு உதாரணம், நான் எனது வியாபாரிகளிடம் பேசி 50 தொங்கும் விளக்கு மற்றும் 50 கிரீடம் சன்னதிக்கு வாங்கி தர இருக்கிறேன்.
இந்த இடத்தில கமிட்டீ எப்படி, எந்த அடிப்படையில் முடிவுக்கு வருவீர்கள்?
கமிட்டீ அமைத்ததே கமிட்டீ முடிவு எடுப்பதற்கு. வரு முன் காக்க பொருட்கள் கமிட்டீயிடம் அனுமதியுடன் வாங்கி கொடுக்கலாம் என்று அறிவிப்பு செய்யலாம். அதை விட்டு,
யார் கொடுத்தாலும் வாங்குவது கமிட்டீ பொருட்களை நிர்வாகம் செய்ய இயலாது. 50 தொங்கு விளக்கும், 50 கிரீடமும் வாங்கி கொடுக்க எல்லோரிடமும் வசதி இருக்கிறது.
அவைகளை சுத்தம் செய்து நிர்வாகம் செய்வது சாத்தியம் இருக்காது.
நினைவிருக்கட்டும் கமிட்டீ உறுப்பினர்களும் மிக சொற்ப நேரமே கோவிலுக்கு அர்ப்பணிக்க முடியும்.
50 விளக்குகள் தொங்க விடும் அளவுக்கு சன்னதியில் இடம் இருந்தாலும் ஐயர் நிம்மதியாக, வசதியாக அவர்கள் வேலை பார்க்க முடியாது.
P = Practice
பழக்கப்படுத்துதல் என்று பொருள்.
கமிட்டீ நிர்வாகம் நடைமுறையில் இல்லாவிட்டால், மீண்டும் பழைய 36 வருடங்கள் முன் இருந்த முறை வந்து விடும்.
நான் முதல் முதல் கோவில் வந்த போது, வந்தவர்கள் அவருக்கு தேங்காய் கொடுங்கள் என்று சொன்னார்கள். அதாவது அதன் உள் அர்த்தம், சொன்னவரை விட அவர் சமூக ரீதியாகவோ, பதவி ரீதியாகவோ பெரியவர் என்று பொருள்.
ஆக நமது கவனம் மனிதர்களை திருப்தி படுத்த நமது சக்தியை, எனர்ஜியை செலவு செய்யாமல், கோவிளை பிரசித்தி பெற வைக்க செலவு செய்வது முக்கியம்.
கமிட்டீ உருவாக்கும் சட்டக் கோட்பாடுகளை, அதை கடைபிடிப்பதற்கு முதன்மை கொடுக்க வேண்டியது கமிட்டீ கடமை.
இப்படிக்கு,
MKP. பாண்டுரெங்கன்
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கௌரவ தலைவர்
மலேஷியா