Principle Of Management 1-By MKP Pando

Principle Of Management 1-By MKP Pando. I am writing about the discipline and standard to enable to manage our Sree Selva Vinayagar Temple effectively. Because temple members understand Tamil well, I write in Tamil language.

நிர்வாக கோட்பாடுகள்

நிர்வாகம், தலைமைத்துவம், எளிது இல்லை தான். நிர்வாகம் தலைமைத்துவம் பற்றி மாதம் பல நூல்கள், விடியோக்கள் வெளிவருகின்றது. எதுவும் தெரிந்து கொள்ளாமல் நிர்வகிக்க அனுமதிப்பது ஆபத்தில் முடிந்து விடும்.

எனது அனுபவம்

நான் நிர்வாகம் தலைமைத்துவம் பற்றி எழுதுவது எனது அனுபவம் மற்றும் நான் படித்த அறிவை வைத்துதான். அப்படியென்றால் எனது கருத்தே உலகத்தில் சிறந்தது என்று பொருள் இல்லை. நானும் மாணவனே.

கோவில் நிர்வாகம் & தலைமைத்துவம்

முதல் முதலில் நான் சொல்ல விரும்புவது நமது கோவில் உறுப்பினர்கள், பக்தர்கள், நன்கொடை அளித்தவர்கள் என்ன மாதிரி அணுகு முறையில் கோவிலை மற்றும் கோவில் நிர்வாகஸ்தர்களை பார்க்கின்றனர் என்பது தெளிவாக இருக்க வேண்டும்.

நாம் பார்த்திருப்போம் அல்லது கேட்டு இருப்போம். கோவில் நிர்வாகஸ்தர்கள் பக்தர்களை துஷ்பிரயோகம் செய்ததும் படித்து அறிந்து இருப்போம். பக்தர்கள் கோவிலையும் நிர்வாகிகளையும் துஷ்பிரயோகம் செய்ததையும் படித்தோ கேட்டோ அறிந்திருப்போம்.

இது போன்ற தவறுகள் நிகழாமல் தடுப்பதற்கு என்ன வழி? வரு முன் காப்பது சிறந்தது இல்லையா?

தரத்தை நிர்ணயித்தல்

ஒரு போலீஸ் வேலைக்கு போக உடல் தரம் வேண்டும், படிப்பு தரம் தகுதி வேண்டும்.

அது போன்று கோவில் சம்பந்தமான விஷயங்களில் முக்கியமாக ஆழ் மனதின் தரம் ஸ்ரீ செல்வ விநாயகருக்கு சேவை செய்யும் நோக்கம் இருக்கிறதா அல்லது மாற்று நோக்கம் உள்ளதா என்பது அவர் அவருக்குத்தான் தெரியும்.

நான் ஒரு முறை பார்த்திபன் அவர்களிடம் கேட்டேன். நான் பெரியவனா? ஸ்ரீ செல்வ விநாயகர் பெரியவரா? அவர் தடுமாறுகிறார். செல்வ விநாயகர்தான் பெரிது, முக்கியம் என்று அவரால் சொல்ல முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் நான் ஏன் அவரை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது? சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக துஷ்பிரயோகம் செய்ய தயங்க மாட்டேன்.

நான் யார்

எந்த தலைமைத்துவ நூல்களை படித்தாலும், தனது நோக்கம் அறியாமல் சரியாக வழிநடத்த முடியாது. முக்கியமாக இந்த கோவிலை வழி நடத்த, நிர்வாக கமிட்டி நோக்கம் தெளிவாக வேண்டும்.

ஸ்ரீ செல்வ விநாயகரை திருப்தி செய்தலே நிர்வாக கமிட்டியின் தலையாய நோக்கமாக இருக்கவேண்டும்.

இதில் மிகத்தெளிவு வேண்டும்.

எனக்கு முதல் தேங்காய் கொடுக்கவில்லை என்பதற்கும், கோவிலில் நான் விரும்பிய வர்ணம் பூச வில்லை என்பதற்கும் ஒன்றும் வேற்றுமை இல்லை.

நோக்கத்தில் தெளிவு இல்லை என்றால் நிர்வாகிகளின் கவனம் நிர்வாகத்தில் இல்லாமல், மற்றவர்களை திருப்திப்படுத்துவதில் கவனம் திசை மாறிப்போகும்.

கோவில் நிர்வாகிகள் விநாயகருக்கு மட்டும் அடிமையாகி இருக்கலாமே தவிர, மற்றவர்களுக்கு அடிமையாகி விடக் கூடாது.

Standard

எப்படி ஒரு வேலைக்கு போகும் பொது சில தகுதிகள் நிர்ணயிக்கப்படுகிறதோ, கண்டிப்பாக கோவில் நிர்வாகம் சில தரத்தை நிர்ணயிக்க வேண்டும்.

ஒரு உதாரணம், நான் பெரிய வசூல் செய்தேன், அனால் நீங்கள் தேர்வு செய்த நிறம் சரியாய் இல்லை. என் செலவில் வேறு நிறம் அடிக்கிறேன் என்றால் அது நான் ஆதிக்கம் செய்கிறேன் என்று பொருள். ஒரு நிறத்தை மாற்ற, சாஸ்திரம் அனுமதிக்குமா, போன்ற பல ஆய்வுகள் தேவை. பணம் இருக்கிறது என்ற ஒரு தகுதியை வைத்து முடிவுக்கு வரும் விஷயம் இல்லை.

என்ன என்ன தரம் வேண்டும் என்று போக போக, யோசனை வர வர இதில் எழுதுகிறேன்.

இப்படிக்கு,

MKP. பாண்டுரெங்கன்
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கௌரவ தலைவர்
மலேஷியா

 

Principle Of Management 2

Principle Of Management 3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *