History Of Sree Selva Vinayagar Deity-From Where The Deity Came From
Who knows? No one. Selva Vinayagar Deity came from here and there. Because it was a very old generation history, no one can tell the exact story.
Although it is forgotten, we are collecting info to provide as much info as possible.
The following is told by Mr. Ganesan and written by Mekala.
மேல மருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் எழுந்தருளிய வரலாறு
விநாயகர் (சமஸ்கிருதம்), இந்துசமயக் கடவுள்களில் இந்து மதத்தினரால் வழிபடப்படும்முதன்மைக் கடவுள்.
70ஆண்டுகளுக்கு முன்னால், உருவாட்டி கிராமத்தின் கால் வாயில், வழிபோக்கர்கள் மூலமாக எங்கிருந்தோ விநாயகரை கடத்தி, கால் வாயில் போட்டுசென்று விட்டார்கள். அந்த பக்கமாக வந்த
கிராமமக்களின் தொடர்பில் உள்ளவர்கள், அந்த ஊரின் முன்னோர்களிடம் தெரிவித்தார்கள்.
உடனே, மாட்டுவண்டியை இரவோடு இரவாக கட்டி வந்து, அந்த 3 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட விநாயகரை எடுத்து வந்து, மேல மருங்கூர் கன்மாயின் கிழக்கு பக்கமாக உள்ள தண்ணீரில், அந்த சிலையை போட்டு வைத்துள்ளார்கள் . தண்ணீர் வற்றும் போது, அந்தசிலை இருப்பது தெரியவந்துள்ளது .
பிறகு, அந்தவிநாயகரை வழி பட ஆரம்பித்துள்ளார்கள். தண்ணீரில் விநாயகர் சிலையை படுக்க வைத்தால், அந்தஊரில் மழை பெய்து, குளிர்ச்சியில் இருக்கிறார் என்பதை ஐதீகமாக வைத்திருந்தார்கள்.மழை பெய்தால் விநாயகரை நிமிர்த்து வழிபடுவதும், மழை பொய்த்தால், மழைவரவேண்டும் என்று வேண்டி, சிலையை படுக்க வைத்து வழி படுவதும், அக்காலத்தில்வாழ்ந்த முன்னோர்களின் மரபாக இருந்தது.
ஊர் பெரியர்வகள் அனைவரும் ஊர் கூட்டம்போட்டு, விநாயகருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.அன்றைய சூழல்களில் பசியும் பட்டினியும் கோயில் கட்ட இயலவில்லை.
அந்த கால சூழ்நிலையில், தன் உழைப்பையே நம்பி வாழ்ந்த தெய்வத்திரு ஆதிமூலம் செட்டியார் அவர்கள் , கோயில் உண்டாக வேண்டும் என்று ஆர்வத்தை தன்னுடைய அண்ணன் மகன் தெய்வத்திரு மு.கி பாலுச்சாமி செட்டியார் அவர்களிடம்தன் எண்ணத்தை கூறியுள்ளார் . பாலுச்சாமி அவர்களும், தன்னுடைய18 வயதிலிருந்து, கன்மாயில் குளிக்கும்போது, இந்த விநாயகரிடம், தான் நல்ல ஒரு நிலைமைக்குவந்தால், உனக்கு ஒரு கோயில் கட்டுவேன் என்றொரு வேண்டுதலை வைத்திருந்தார்.
தான் நினைத்தது போல, விநாயகரின்அருளால் தொழிலில் வளர்ந்தார் தெய்வதிரு மு.கி பாலுச்சாமி செட்டியார் அவர்கள். தன்னுடையவளர்ச்சியில் ஆத்ம திருப்தி கொண்ட அவர், விநாயகருக்கு என் குடும்பம்சார்பாக கோயில் கட்டி தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து, காலத்திற்கும்நமது ஊர் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உயரிய ஆன்மீக சிந்தனையில், நம் குடும்பமும் நம் கிராம மக்களும் நிலைத்து வாழ வேண்டும்என்று கருதி, இவருக்கு செல்வ விநாயகர் என்று பெயர் சூட்டி, 1982 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து, 1985 ஆம்ஆண்டு ஆனி மாதம் கும்பாபிஷேகம், அன்றையஆச்சாரியார் வீரமணி தலைமையில் நடத்தி உள்ளார்
இத்தனை மகத்தான சக்தியுடை விநாயகரை, கும்பாபிஷேகம்முடிந்தவுடன், பல காரணத்தினால் மேலமருங்கூர் மக்கள் கவனிக்க தவறிவிட்டார்கள்.
தெய்வீகசக்தியுடைய செல்வ விநாயகர் மீண்டும் எழவேண்டும் என்று முடிவு செய்து, 36 வருடம் கழித்து, அதே பாலுச்சாமி செட்டியாரின் மூத்த மகன் முயற்சி செய்ய, அனைத்து மு.கி பாலுச்சாமி செட்டியார் வாரிசுகளும் ஒன்று சேர, ஊர்மக்கள் அனைவரும் கை கொடுக்க,கோயில் மீண்டும் உருவானது.
அதே மாதத்தில் 2020 ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி, மிக பெரிய அளவில், எல்லாமக்களும் கண்டு வியக்கும் வண்ணம் நமது விநாயகருக்கு மகுடம் சூட்டி கும்பாபிஷேகம் நடந்தது.
என்றும் நமக்கு துணையாக இருந்து, நமக்குபலம் கொடுப்பார் நம்ம தெய்வீக செல்வ விநாயகர்
தொகுப்பாளர் : கா.செல்வ கணேசன் B.A
எழுத்து வடிவம் : உ.மணிமேகலை B.Tech.I.T